பொங்கலுக்கு முன்பே “பொங்கியதால்” மக்கள் குழப்பம் !


people-huddle-before-pongal-surge

print

பொங்கல் திருநாள் விடுமுறையை ஜனவரி 14) கட்டாய விடுமுறை பட்டியலில் (Compulsory Holiday) இருந்து நீக்கி, விருப்ப விடுமுறை பட்டியலுக்கு (Non Compulsory Holiday/Restricted Holiday) மத்திய அரசு மாற்றியதாக புரளி ஏற்பட்டது. இதற்கு காரணம், கட்டாய விடுமுறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அதன்பிறகு ANI (Asian News International) என்ற செய்தி நிறுவனம், பொங்கல் திருநாள் விடுமுறையை, கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. உடனடியாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு பூதாகரமாக்கின.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தலைவர்களும் மோடியை வசைபாடியும், மத்திய அரசை விமர்சித்தும் அறிக்கைவிட, சமூக ஊடகங்களில் இருக்கும் “பொறுப்புள்ளவர்களும்”, தாங்கள் சிந்திப்பதை மறந்துவிட்டு ஊடகங்களில் வந்ததையும், தலைவர்கள் கூறியதை கேட்டும் (பாசிச பா.ஜ.க., வட இந்திய கட்சி, தமிழின விரோதி மோடி… இன்னும் பல…) விமர்சித்தனர். தி.மு.க போன்ற பொறுப்பான எதிர்க்கட்சிக் கூட போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. இதனால் எழுந்த விளைவு… மக்களிடையே ஏற்பட்ட குழப்பம் மட்டுமே.!
ஆனாலும், இந்த விஷயத்தில் ஆராய்ந்து பார்த்து அவசரப்படாமல் தெளிவாக அறிக்கைவிட்ட பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாசையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்தது, வரவேற்கப்படக் கூடியது. பாராட்டப்பட வேண்டியது. அவசரம், புரிதல் இல்லாமல் ஒரு விஷயத்தை கையாண்டால் கடைசியில் குழப்பம் ஏற்பட்டு, நம்பிக்கையை (Credibility) இழக்க நேரிடும் என்பதை மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன்.
சர்ச்சைக்கு காரணம் என்ன?

மத்தியில் உள்ள அரசு (இப்போதைய பா.ஜ.க அரசு, இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு) கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலில், எப்போதும் பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்த்ததில்லை; இருந்ததும் இல்லை; இடையில் நீக்கியதும் இல்லை; அதாவது, மொத்தம் 17 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்களாகும். இதில், 14 நாட்களை இந்தெந்த பண்டிகைகளுக்காக கட்டாயம் விடுமுறை விடவேண்டும் தெரிவித்துவிடும். (அது, திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை எப்போது வந்தாலும் சரி.)
மீதமுள்ள 3 கட்டாய விடுமுறை நாட்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் பண்டிகையை பொறுத்து தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கென்று விருப்ப விடுமுறை பட்டியலில் உள்ள 12 விடுமுறை நாட்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் இருக்கும் மத்திய அரசு ஊழியர் நலக் குழு தீர்மானிக்கும். இங்குதான் பிரச்னையே.
கீழே விடுமுறை பட்டியல் விவரம்:-

(Gazetted Holidays 2017 / Restricted Holidays 2017 – For Central Government Employees in Delhi and States)
1. Republic Day 26th Jan Thursday
2. Mahavir Jayanti 9th Apr Sunday
3. Good Friday 14th Apr Friday
4. Buddha Purnima 10th May Wednesday
5. Idu’l Fitr 26th Jun Monday
6. Independence Day 15th Aug Tuesday
7. Id-ul-Zuha(Bakrid) 2nd Sep Saturday
8. Dussehra 30th Sep Saturday
9. Muharram 1st Oct Sunday
10. Mahatma Gandhi’s Birthday 2nd Oct Monday
11. Diwali (Deepavali) 19th Oct Thursday
12. Guru Nanak’s Birthday 4th Nov Saturday
13. Milad-Un-Nabi or Id-E-Milad 2nd Dec Saturday
14. Christmas 25th Dec Monday.
In addition to the above 14 Compulsory holidays, three holidays shall be decided from the list indicated below by the Central Government Employees Welfare Coordination Committee in the State Capitals.
1. An additional Day for Dussehra
2. Holi
3. Janamashtami (Vaishnavi)
4. Ram Navami
5. Maha Shivratri
6. Vinayak Chaturthi
7. Makar Sankaranti
8. Rath Yatra
9. Onam
10. Pongal
11. Basanta Panchami
12. Vishu / Vaisakhi / Vaisakhadi / Bhag Bihu / Mashadi Ugadi / Chaitra Sakladi / Cheti Chand / Gudi Pada 1st Navratra / Nauraj / Chhath Pooja / Karva Chauth)

இந்த நிலையில், இந்தாண்டுக்கான 3 நாட்களை மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தசரா என்று தேர்ந்தெடுத்துவிட்டார்கள். பொங்கலை விட்டுவிட்டார்கள். காரணம், பொங்கல் திருநாள் தினம் சனிக் கிழமைதானே வருகிறது.

அன்று விடுமுறைதானே. எதற்காக இதை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்த்து, ஒரு கட்டாய விருப்ப விடுமுறை நாளை இழக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். இப்போது விருப்ப விடுமுறை பட்டியலில் இருப்பதால், மத்திய அரசின் சேவை துறை (ரயில்வே, அஞ்சல்) ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். இது திடீரென ஞானோதயம் வந்ததும் புரளியை கிளப்பிவிட்டார்கள். மத்திய அரசு பொங்கல் விடுமுறையை கட்டாய பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது என்று.

தற்போதைய சர்ச்சை மூலம் ஒரு தீர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. அதாவது, புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, குரு நானக் பிறந்த நாள் போன்ற எல்லோராலும் கொண்டாடப்படாத நாட்கள், கட்டாய விடுமுறை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் போது, பல்வேறு மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் இணைக்கச் சொல்லி, பொங்கலுக்கு முன்பே பொங்கியவர்கள் வலியுறுத்தலாம்.! அதற்கான ஒரு வாய்ப்பாகவே இதை பார்க்கலாம்.

மக்களை குழப்பாத அன்புமணிக்கும், திருமாவுக்கும் சபாஷ்!

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.