Header Banner Advertisement

தரித்திர யோகங்கள் !


Poor Yoga

print

தரித்திர யோகம் உடையவர்கள் உண்ண உணவு இல்லாமலும் ,-உடுக்க உடை இல்லாமலும் -இருக்க வீடு இல்லாமலும் திண்டாடுவார்கள் !

2-5-8-9 இந்த நான்கு இடங்களில் பாபக்கிரகங்கள் நின்றால் ,மிகுந்த தரித்திரம் உண்டாகும் .,

இவற்றுள் மூன்று வீடுகளில் பாபக்கிரகங்கள் இருக்க முக்கால் தரித்திரம் ,

இவற்றுள் இரண்டு வீ்டுகளில் பாபகிரகங்கள் இருக்க
கால் தரித்திரம் .,

எட்டு கிரகங்கள் ஒரே வீட்டில் இருக்க பிறந்தவன் பெரிய

ஞானியாகவும் – அதே சமயம் தரித்திரனாகவும் இருப்பான் .,

அந்த எட்டு கிரகங்களும் நான்கு நான்காக ப் பிரிந்து இரண்டு வீடுகளில் இருக்க பெற்ற ஜாதகன் – மிகுந்த கொடியவனாகவும் ,மூடனாகவும் -நாணம் இல்லாதவனாகவும் இருப்பான்.,

அந்த எட்டு கிரகங்களும் ஏதேனும் மூன்று வீடுகளில் இருக்க பிறந்தவன் – ஜாதகன் உடம்பில் காயத்தினால் ஏற்ப்பட்ட வடு உடையவனாகவும் -அவன் யாருக்கும் ஒரு காசு உதவ மாட்டான் ,சேர்த்து தரித்திரனாகவும் இருப்பான் .,

அந்த எட்டு கிரகங்களும் 7 – 8 – 9 – 10 இந்த இடங்களில் விரவி நின்றால் ,- அந்த ஜாதகன் ஈனத் தொழில் செய்பவனாகவும் – அதே சமயத்தில் மிகவும் சோம்பேறியாகவும் இருப்பான் .,
அந்த எட்டு கிரகங்களும் 10 -11- 12 மற்றும் லக்கினத்திலும் அந்த எட்டு கிரகங்கள் விரவி நிற்க பிறந்த ஜாதகன் இழி தொழிலை செய்து பணம் சேர்த்து வயிறார உண்ணாமல் சிறிது திரவியங்களும் சேமித்து வைப்பான்