Header Banner Advertisement

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு குறைவாக சென்றுள்ளதாக அமித்ஷா வருத்தம்


Amit Shah modi

print

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு குறைவாக சென்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா வருந்தும் வகையில் கூறியுள்ளார் .

பாரதிய ஜனதா அரசின் மூன்று ஆண்டு சாதனை குறித்து கோவாவில் நடைபெற்ற விழாவில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது :-

நிகழ்ச்சிகளில் எழுதி வைத்துப் படிக்கும் பழக்கம் கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்
சில சமயம் தாய்லாந்தில் படிக்க வேண்டியதை, மலேசியாவில் வாசித்து விடுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட, பிரதமர் மோடி குறைவான நாடுகளுக்குத்தான் சென்றுள்ளார் ” என்று கிண்டலாக கூறினார்.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா என உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் ஆயிரக்கணக்கான மக்களே இந்தியாவின் பெருமை என்று அமித்ஷா பேசினார்.