சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை


punjab-assembly-elections-congress-leader-rahul-gandhi-consulting-assignments

print

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளத்தை சேர்ந்த, முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலிதளம் – பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்து, நாடு திரும்பிய, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று, பஞ்சாப் மாநில காங்கிரஸ், தலைவர்களை சந்தித்தார். அப்போது, மாநில சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார். அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், கூறியதாவது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்து, விரைவில் காங்கிரசில் இணையவுள்ளதாகவும், அவர் அல்லது அவரது மனைவிக்கு, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.