செல்லாத ரூ.500 ரூ. 1,000 நோட்டுகளை அழிக்கும் பணியை நிறுத்தியது ரிசர்வ் வங்கி


rs-500-rs-destroy-mission-deployed-1000-rbi-stoped

print

வங்கிகளில் செலுத்தப்பட்ட செல்லாத ரூ.500 ரூ. 1,000 நோட்டுககளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் பிரதமர் மோடி , கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில் அந்த நோட்டுகள், அவ்வப்போது அழிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி, திடீரென நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்களில் கூறப்படுவதாவது :-

செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி, ரிசர்வ் வங்கியின் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வார இறுதியில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணி நிறுத்தப்பட்டது என கூறப்படுகின்றன

இதற்கிடையே, நாடு முழுவதும், ரிசர்வ் வங்கியின், 4,075 கரன்சி பாதுகாப்பகங்களில் உள்ள, செல்லாத நோட்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் தன்மை குறித்த விரிவான தணிக்கையை, ரிசர்வ் வங்கி துவக்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரிசர்வ் வங்கி தகவல்படி, செல்லாத நோட்டு திட்ட அறிவிப்புக்கு முன், 9,026 கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட,ரூ.500 ரூ. 1,000  நோட்டுகளின் எண்ணிக்கை, 2,200 கோடி.

எதிர்பார்ப்புக்கு அதிகமாக, செல்லாத நோட்டுகள், வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதால் அவற்றை அழிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக, தகவல்கள் கூறுகின்றன. கூடுதலான நோட்டுகள், செலுத்தப்பட்டு இருந்தால், அவற்றில் கள்ள நோட்டுகள் உள்ளனவா என்றும், அவற்றின் எண்கள், வரிசை எண் போன்றவற்றை தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும், நிபுணர்கள் கூறுகின்றனர்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.