ரூ.4 லட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை


everyone-income-tax-pan-card-bank-customers

print

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் பிரதமர் மோடி , கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து கணக்கில் வராத 3 – 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் பிரதமர் மோடி , கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார்.

இதன் பிறகு வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மட்டும் கணக்கில் வராத 3 – 4 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது . இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் செலுத்தி உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் நவம்பர் 9 ம் தேதி முதல், பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.10,700 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டிபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.