Header Banner Advertisement

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடைவிதிக்க உத்தரவிட மன்றாடிய அமைச்சர் செல்லூர் ராஜு ?


RSS rally ban minister Sellur Raju

print

தமிழக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் செல்லூர் ராஜு மன்றாடி வேண்டுகோள் விடுவித்ததின் அடிப்படியிலேயே மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் கொண்டாடப்பட உள்ளதாகவும் இந்த ஊர்வலத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைக்க உள்ளதாக துண்டு பிரசுரம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு வுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறான சர்ச்சை பதிவுகள் வைரலாக பரவியது .

இந்த நிலையில் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தபோது

மதுரையில் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பதாக நான் யாரிடமும் கூறவில்லை என்றும் தன்னை கேட்காமலேயே ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் .

இந்த சுழலில் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில்வைரலாக பரவும் பல்வேறான சர்ச்சை பதிவுகளுக்கு முடிவு கட்டும் வகையிலும் பிற்கால தனது அரசியல் வாழ்க்கையை அமைச்சர் செல்லூர் ராஜு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் தமிழக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி காவல்துறை அனுமதி மறுக்க வாய்மொழி உத்தரவிட மன்றாடி வேண்டுகோள் விடுத்தாராம்.

அதன் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரி நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாமக்கல்லில் காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி காவல்துறை அனுமதி மறுப்பது என்பது முறையற்றது என ஆர்.எஸ்.எஸ்  ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர் .

அமைச்சர் செல்லூர் ராஜு சசிகலா மற்றும் தினகரனின் தீவர விசுவாசி என்பது அனைவரும் அறிந்ததே .