Header Banner Advertisement

பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாக கூறி கடைக்காரரை தாக்கிய பொதுமக்கள் !


Sales of plastic rice Biryani attack civilians

print

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாக கூறி, கடைக்காரரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அம்மாநிலத்தில்  பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதையடுத்து அந்த அரிசி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத்தில் உள்ள நந்தவனம் பகுதியில் வசித்து வரும் அசோக் என்பவர் நேற்று முன்தினம் கடையில் அரிசி வாங்கி சமைத்தார். அந்த சாதத்தை சாப்பிட்டபோது, வாயில் ஒட்டிக்கொண்டதாகவும், வித்தியாசமான சுவையில் இருந்ததாகவும் தெரிகிறது. எனவே, இது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்று கூறி அப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதேபோல் தனியார் விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐதராபாத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் தெரிவித்ததால், அதனை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

ஆய்வு முடிவுகள் இன்று கிடைக்கும். அதன்பிறகே அவை பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த சுழலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாக கூறி, கடைக்காரரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.