கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி !


santas-role-terrorist-shooting-attack-turkey

print

துருக்கி தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக  தகவல் வெளியாகி உள்ளது .

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தப்பி பிழைத்தவர்கள் கூறியதாவது :-

புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. இதனை பார்த்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் அருகில் இருந்த கடலுக்குள் குதித்து தப்பினர். துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் 7 பேர் இருந்துள்ளனர். இதில் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததான்.மேடை அருகே வந்த இருவர் சுட்டனர். ஒருவர் சன்டா கிளாஸ் வேடம் அணிந்திருந்தார். மற்றொருவர் இருட்டில் அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்

கடந்த 2016 ம் ஆண்டில் மட்டும் துருக்கியில் இது வரை 6 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. 220 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.