Header Banner Advertisement

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறாராம்


minister sengottaiyan

print

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படைத்தன்மையுடனும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டும் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சிய வளாகத்தில் நடைபெற்ற சென்னை வட்டார பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் என்ற தலைப்பில் சொற்பொழிவு விழா நேற்று நடைபெற்றது .

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியாவது :-

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே ?

இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அமைச்சராக வெளிப்படைத்தன்மையுடனும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டும் செயல்படுகிறேன். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்று செங்கோட்டையன் கூறினார்