Header Banner Advertisement

சசிகலாவின் எதிர்பாளர்கள் குவைத்தில் உருவக்கிய ஜெய.தீபா பேரவை !


shikala-opponents-kuwaiti-council-new-deepa-peravai-create

print

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று சசிகலாவின் தலமையை ஏற்க மறுத்து வரும் அதிமுகவை சேர்ந்த எதிர்பாளர்கள் தமிழகத்தில் வலியுறுத்தி வரும் நிலையில் குவைத்தில் இதயதெய்வம் அம்மா தீபா பேரவை எனும் பெயரில் அமைப்பு  ஒன்று உருவாகி உள்ளது .

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5- மறைவானதை அடுத்து அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுக வை சேர்ந்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அவரை அந்த பதவியில் கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி அமரவைத்து உள்ளனர்

இதையடுத்து கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பொறுப்பேற்று கொண்டுள்ளார்

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டமைக்கு அக்கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதனை வெளிப்படுத்தும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக தமிழகத்தில் ஓட்டப்பட்ட போஸ்டரில் சாணி வீச்சு, கருப்பு மை வீச்சு நடத்தியும்,பிளக்ஸ் பேனரை கிழித்தும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

தமிழக முழுவதும் குக்கிராமங்கள் தோறும், அதிமுக.,தொண்டர்களிடம், தீபா, ஓசையில்லாமல் ஊடுருவியதால் தீபாவை வாழ்த்தியும் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்களை தன்னெழுச்சியாக அதிமுக வினரே வைத்துள்ளனர்.

மேலும் சென்னை தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டில் அதிமுக.வினர் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தன்னை சந்திக்க வரும் தொண்டர்களை பார்த்து விரைவில் அரசியல் பயணத்தை தொடரப் போவதாக தீபா தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் குவைத்தில் வசித்து வரும் தமிழர்கள் சுமார் 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து இன்று ஜெய.தீபா பேரவை ஒன்றை தொடங்கி உள்ளதாக ஜெய.தீபாபேரவை குவைத் மண்டலம் எனும் முகனூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் .

மேலும் ஜெய.தீபாபேரவை குவைத் மண்டலத்தில் உறுப்பினராக இணைய கீழ் காணும் நிர்வாகிகளின் தொடர்பு எண்களை பயன்படுத்த அறிவித்துள்ளனர் .

நிர்வாகிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண் :-

பீர்முகமது : 60619569
இஸ்மாயில் 50520701
சரவணன்:- 65091402 என்று ஜெய.தீபாபேரவை குவைத் மண்டலம் எனும் முகனூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.