Header Banner Advertisement

ஸ்லிப்பர் செல்களை பிரதமர் மோடியால் மட்டுமே அழிக்க முடியும் என ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.சி.பழனிசாமி பேச்சு


K.C PALANISAMY DINAKARAN MODI

print

ஸ்லிப்பர் செல்களை பிரதமர் மோடி அரசால் மட்டுமே அழிக்க முடியும் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.சி.பழனிசாமி  கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஊழல்வாதி சசிகலாவை நேற்று முன் தினம் தினகரன் இன்று சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று மேலூர் பொதுக் கூட்டத்திலேயே நான் பேசினேன் .அந்த விசாரணை நடைபெற்றால்தான் சசிகலா பத்தரை மாற்று தங்கம் என்பதை நிரூபிக்க முடியும்

அதிமுகவின் இரு அணிகளும் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைய வேண்டும் என்றும் சுய விருப்பத்திற்காக இணைந்தால் அது நீண்ட நாட்கள் நீடிக்காது

இரு அணிகளும் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் , வியாபார நோக்கத்துடனும் செயல்படுகின்றனர்

தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்தால் , அந்த அமைச்சரவையின் ஆயுட்காலம் நீடிக்காது தேவையானபோது நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம்

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அவசரகதியில் நினைவிடமாக மாற்றக் கூடாது .போயஸ் தோட்ட இல்லம் குறித்து, ஜெயலலிதா என்னமாதிரி உயில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நன்கு அறிந்த பின் நினைவிடமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தங்கள் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் , ஸ்லிப்பர் செல் களைப் போல செயல்படுகிறர்கள் என்றும், தேவையானபோது நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்று .தினகரன் கூறினார்.

இந்த சுழலில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக.,ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக உருவான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் விரைவில் இணையும் என இரு தரப்பு முக்கிய தலைவர்களும் உறுதியுடன் கூறியுள்ளனர் ,

இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பங்குபெற்ற ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.சி.பழனிசாமி பேசியதாவது :-

ஸ்லிப்பர் செல்களை பிரதமர் மோடி அரசால் மட்டுமே அழிக்க முடியும். மேலும் தமிழக மக்களின் நலன் அடிப்படையிலேயே முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை அடிக்கடி சந்தித்து வருகிறார் என கே.சி.பழனிசாமி கூறினார்