தேடப்படும் மோசடி பேர்வழி குற்றவாளி விஜய் மல்லையாவுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு


Supreme Court orders to send notice to Vijay Mallya

print

நீதிமன்ற உத்தரவுகளை மீறி, 273 கோடி ரூபாயை, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியதாக, வங்கிகள் கூறிய புகார் குறித்து பதிலளிக்கும்படி, தேடப்படும் மோசடி பேர்வழி குற்றவாளி  விஜய் மல்லையாவுக்கு, அறிவிக்கை அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து மோசடி பேர்வழி விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான்.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வங்கிகள் சார்பில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் மல்லையா மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தன் சொத்துக்களை விஜய் மல்லையா விற்கக் கூடாது, யாருக்கும் மாற்றக் கூடாது என, நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த, ‘டியாஜியே’ என்ற நிறுவனத்தில், தன் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த, 273 கோடி ரூபாயை, விஜய் மல்லையா, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளார் எனவே விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், குரியன் ஜோசப், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, விஜய் மல்லையாவுக்கு அறிவிக்கை அனுப்ப உத்தர விட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 2க்கு ஒத்தி வைத்ததுள்ளது,

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.