Header Banner Advertisement

சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர்


Syria IS Terrorists seized

print

சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர்

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் சிரியா அதிபர் படைகளும், அதிபர் ஆதரவு ரஷியா படைகளும், அமெரிக்க கூட்டுப் படைகளும் மும்முனை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை ஒடுக்க முடியாத நிலையில், அங்கு ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள கிரயதாயின் நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் பிடியின் கீழ் கொண்டு வந்து உள்ளனர். இந்த நகரம், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஆகும்.

இந்த நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் வந்துவிட்டதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று உறுதி செய்துள்ளது

இந்த நகரம் வீழ்ந்து விட்டது பற்றி சிரியா அதிபர் ஆதரவு படைகள் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது