15 பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பாதிரியாரின் முன்னாள் காதலிகள் பரபரப்பு புகார் !


trafficked-women-propelled-priest-furore-15-complained

print

15 பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பாதிரியாரின் முன்னாள் காதலிகள்
இத்தாலி காவல்துறையினரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்

இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள பதுவா நகரைச் சேர்ந்த ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது, அவரது முன்னாள் காதலிகள் மூன்று பேர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.

அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும், அவருக்கு நன்கு பழக்கமான 15 இளம்பெண்களை அத்தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பாதிரியாரின் வீட்டில்
இத்தாலி காவல்துறையினர்
சோதனை செய்த போது வீட்டிற்குள் எடுக்கப்பட்ட ஆபாசப்படக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி.கள் மற்றும் ஆபாச புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து 49 வயதான பெண் ஒருவர் கூறியதாவது :-

பாதிரியாருடன் எனக்கு ரகசிய தொடர்பு இருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு எண்ணற்ற பெண்களுடன் தொடர்புள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதிரியார் மீதான குற்றச்சாட்டு குறித்து நகர மேயரான பாலோ டொனின் என்பவர் கூறுகையில் பாதிரியார் செய்த குற்றங்களை மறைக்க பெரும் சதி நிகழ்ந்து வருகிறது. ஆனால், இவ்விவகாரம் தேசிய அளவில் பெரிதாகிவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பாதிரியாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.