Header Banner Advertisement

போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


Collector High Court ordered contempt case

print

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் செந்தில் குமரய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது :-

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி ஆகியோர் உத்தரவில் கூறியதாவது :-
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். வராதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.