Header Banner Advertisement

கேடி ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வைகைச் செல்வன் முடிவு


Vaigai Selvan Rajendra Balaji

print

தன்னை பற்றி கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
என வைகைச் செல்வன் திட்டவட்டமாக கூறியுள்ளார் .

தனியார் பால் நிறுவனங்களின் கலப்படம் குறித்து கே.டி ராஜேந்திர பாலாஜி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

அந்த ஆளு லூசு. வைகைச்செல்வன் ஒரு சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. குழம்புக்கு ஆகாது.

பாலில் கலப்படம் உள்ளது குறித்து நான் பேசி வருவதை சிலர் கிண்டல் செய்கின்றனர். இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜினாமா செய்ய வேண்டும் என்று தனியார் பால் முகவர் போல் பேசும் வைகைச்செல்வன் அதிமுகவா? தனியார் பால் நிறுவனங்களிடம் விலை போய் விட்டதால்தான் அவர் இப்படி பேசுகிறார்.

போஸ்டர் ஒட்டியவன் என்று என்னை விமர்சனம் செய்கிறார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவந்தான். விவசாய குடும்பத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மகன். சினிமா போஸ்டரை ஓட்டவில்லை. கட்சி போஸ்டரை மட்டுமே ஒட்டினேன். விருதுநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளேன். இதை நானே கட்சி பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். போஸ்டர் ஒட்டுவது என்ன குற்றச்செயலா? இதை ஏன் விமர்சிக்கிறார் வைகைச்செல்வன்.

வைகைச்செல்வன் உத்தமரா? அரசியலில் நியாயவாதியா? அவர் மீது தொகுதி மக்களிடமே நம்பிக்கை இல்லை. அதனால் தான் மீண்டும் அவர் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தொகுதி மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. என் மீது நன்கொடை வாங்கினேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் யாரையாவது சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். அவரை பதவியை விட்டு அம்மா நீக்கியது, அரசியல் காரணங்களூக்காகவோ, உட்கட்சி பூசல் காரணங்களுக்காகவோ இல்லை. பெண்களிடம் அவர் தவறான முறையில் நடந்துகொண்டதால்தான் அவரை பதவியில் இருந்து நீக்கினார் அம்மா’’ என்று கடுமையாக ராஜேந்திர பாலாஜி தாக்கி பேசினார் .

இந்த நிலையில் இது குறித்து வைகைச் செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தனியார் பாலில் கலப்படம் என்றால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். என் அமைச்சர் பதவி பறிபோனது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவையில்லாத அவதூறு பரப்பி, கேவலமான வார்த்தைகளை பேசியுள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் புகார் தெரிவித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று வைகைச் செல்வன் திட்டவட்டமாக கூறியுள்ளார் .