Header Banner Advertisement

ஊழல்வாதி சசிகலா பினாமி அரசின் அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்


Vijayabaskar Stalin

print

ஊழல்வாதி சசிகலா பினாமி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக.,வின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் .

இது குறித்து ஸ்டாலின் கொளத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அடுத்தடுத்து புகார்கள் வந்த போதும் அவர் ராஜினாமா செய்யவில்லை. இனியாவது அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதிலேயே கவனம் உள்ளது. அதிமுக.,வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களு க்கு லஞ்சம், கமிசன் கொடுப்பது பற்றி சிந்திக்கின்றனர். தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, வருமான வரித்துறை விசாரணை, சி.பி.ஐ., விசாரணை, தேர்தல் ஆணைய விசாரணை உள்ளது. இதனால், அவர்கள் மத்திய அரசிடம் அவர்கள் சரணாகதி அடைந்த அவர்களால், தமிழகத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் மக்கள் பல துன்பங்கள் மற்றும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சேலம் கட்சிராயன் ஏரியை பார்வையிட மீண்டும் செல்வேன் என்று ஸ்டாலின் கூறினார்.