Header Banner Advertisement

திமுக.,காங்கிரஸ் மற்றும் அதிமுக., பாஜக .,வுக்கு ஓட்டளிக்க கூடாது என பொதுமக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்


Vijayakanth

print

திமுக.,காங்கிரஸ் மற்றும் அதிமுக., பாஜக .,வுக்கு ஓட்டளிக்க கூடாது என பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள , காரைக்குடியில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :-

ஸ்டாலினுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்படும் கூட்டம். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை மறுநாள் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின்னர், நீட்தேர்வு கொண்டு வந்தால், தேமுதிக ஆதரிக்கும்.

தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு ஓட்டளிக்க கூடாது. இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில் பாஜக ,,காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓட்டளிக்க கூடாது என விஜயகாந்த் பேசினார்