Header Banner Advertisement

இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்


Volcanic eruption risk Indonesia

print

இந்தோனேசியாவில் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை றுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருக்கும் பொது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியேறாதவர்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.