Header Banner Advertisement

ஜெயலலிதா மரணம் குறித்த தகவல் தொடர்பாக அப்போலோ மருத்துவர் காவல் ஆணையாளரிடம் புகார்


whatsapp-reported-jayalalithaa-death-complaint-to-the-commissioner-of-police-by-apollo-physician

print

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் இறந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதனை மருத்துவர் ராம சுப்பிரமணியன் என்பவர் நேரில் பார்த்ததாகவும் அதன் காரணமாக சசிகலா அடியாட்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்த தகவல் உண்மைக்கு புறம்பான தகவல் என்று கூறியுள்ள அப்பல்லோ மருத்துவர் ராம சுப்பிரமணியன் தனக்கு ஆகாதவர்கள் யாரோ விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் வைரலாக அதிகம் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி இந்த தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது.

மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ஆளுநர்., அரசியல் கட்சி தலைவர்கள்., முக்கிய பிரபலங்கள். ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான அவரது உடன் பிறந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, உள்ளிட்ட எவரையும் சசிகலா, இளவரசி குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது .

இந்த சூழலில் ஜெயலலிதா கடந்த 05-12-2016 அன்று நள்ளிரவு 11.30 மணிக்கு இறந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 06-12-2016 மாலை அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோனோர் தற்போது கூறி இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் நண்பர்களே எனும் தலைப்பில் வாட்ஸ் ஆப்பில் வெளியான ( எவ்விதமான திருத்தமும் செய்யாமல்) தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-

whatsapp-image-2017-01-08-at-10-37-25-pmwhatsapp-image-2017-01-08-at-10-37-25-pm-2whatsapp-image-2017-01-08-at-10-37-25-pm-1  whatsapp-image-2017-01-08-at-10-37-25-pm-3

அதிர்ச்சி தகவல் நண்பர்களே

எனது நண்பரும் அப்பல்லோ மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரியும் specialist டாக்டர் அம்மாவின் அப்பல்லோ சிகிச்சையை நேரில் கண்டவர் கூறிய வாக்குமூலம்

———–
அம்மா 22 sept 2016 அன்றே நாங்கள் இரவில் ஹாஸ்பத்திரி வரும்போதே இறந்துதான் இருந்தார்.

இதை வெளியில் சொன்னால் எங்கள் வேலை பறிபோகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் மிரட்டியது.

சசிகலா அடியாட்கள் எங்கள் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்

நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே எங்களுக்கும் உயிர் பயம் உண்டுதானே.

எனவே இந்த உண்மையை நாங்கள் கண்ணீருடன் மறைக்க வேண்டியதாகிவிட்டது.

ஆனாலும் மனம் பொறுக்கவில்லை.

இப்போது மக்கள் கோபத்தில் எல்லா இடத்திலும் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மை கூற தயாராக உள்ளோம்

ஆனால் ஊடகங்கள் எங்களை பேட்டி எடுத்து உண்மையை வெளியிட மறுக்கின்றன

நான் ஏழையாக இருந்த சிறுவயதில் எனக்கு பொருளதவி செய்து என்னை இந்த டாக்டர் படிப்பை படிக்க வைத்த புரட்சிதலைவர் MGR ன் உப்பை தின்றவன் என்கின்ற முறையில் இந்த உண்மையை உலகிற்கு தெரியப்படுத்திவிட்டேன்

என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அம்மாவின் பிள்ளைகள் என் குடும்பத்தை காப்பாற்றுவீர்கள்

Dr.V. Ramasubramanian
MD, FRCP(Glas), DTM & H(Lon), DGUM(Lon)

Immune Boosters

(Visiting Consulting
Doctor-apollo hospital )

Allergy/Immunology and Internal Medicine clinic

House Cum Private clinic address

Boosters-The Immune Clinic

11/4, Vidyodaya,

1st Cross Street,

Landmark:
Behind Vidyodaya School.

T Nagar,

Chennai

Landline -044-42125778
044-28344778

Mobile +91-73388 52778

[email protected]

Website -www.boostersindia.com/ என்று வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவலில் கூறப்பட்டு இருந்தது

இந்த நிலையில் இந்த தகவல் உண்மைக்கு புறம்பான தகவல் என்று கூறியுள்ள அப்பல்லோ மருத்துவர் ராம சுப்பிரமணியன் இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஜார்ஜிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார்

அப்பல்லோ மருத்துவர் ராம சுப்பிரமணியன் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது :-

தனக்கு ஆகாதவர்கள் யாரோ விஷமத்தனமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் தகவல் அனுப்பியதுபோல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவ விட்டுள்ளனர்.

இந்த திட்டமிட்ட அவதூறு தகவல் காரணமாக தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஆதலால் இதன் பின்னனியில் உள்ள விஷயங்கள் மற்றும் தகவலை தயார் செய்து அனுப்பியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன் என மருத்துவர் ராம சுப்பிரமணியன் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார் .

மருத்துவர் ராம சுப்பிரமணியன் அளித்துள்ள புகாரை பெற்று கொண்ட காவல் ஆணையாளர் ஜார்ஜ் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார் .