
![]() |
ஃபிளாஷ் பேக் உத்தியில் புதிய வடிவத்தை தந்த ‘ஜிகர்தண்டா’ |
ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது. பல வேலைகளை செய்தது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாக தான் காட்ட முடியும். ஆனால், இப்போது அப்படியில்லை, எடுத்தவுடன் ஹீரோவை பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன ‘ஃபிளாஷ்பேக்’கில் அவன் கஷ்டப்பட்டதையும் காட்டிவிடலாம்.
‘ஃபிளாஷ் பேக்’ என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள். இதை சினிமாவில் முதன் முதலாக பயன்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய’ரோஷோமான்’ படத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார்.
![]() |
முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய ‘ரோஷோமான்’ |
படத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதனைத் தொடர்ந்து ஒரு கொலையும் நடக்கிறது. அந்த கொலையை அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் விசாரிக்கும் போது நான்கு பேரும் அவரவர்கள் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள்.
நான்கு கோணங்களில் கதை நகரும். கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பது சஸ்பென்ஸ்..! இதுதான் அந்த படத்தின் கதை. இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க ‘அந்த நாள்’ என்ற படம் வந்தது.
![]() |
முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய தமிழ் படம் |
![]() |
அதிகமான ஃபிளாஷ் பேக்கை கொண்ட ‘பாகுபலி’ |