
தம் கட்சிக் கொள்கைக்கு ரத்தின சுருக்கமாக, ‘அண்ணாயிசம்’ என்று பெயர் சூட்டிய எம்.ஜி.ஆர்., அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார். 1973 ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு, யு.என்.ஐ., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நிருபர்களை அனுப்பி வைக்கு மாறு கூறினார். நிருபர்கள் வந்ததும், ‘அ.தி.மு.க.,வின் கொள்கை அண்ணா யிசம். இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்’ என்றார்.
‘காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக் குமோ அதுதான் அண்ணாயிசம்’ என்று விளக்கமளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆரின் அண்ணாயிசத்தை சிலர் பாராட்டினர்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழக மக்களோ அண்ணாயிசத்தின் அடிப்படை என்று தங்களுக்கு தாங்களே ஒரு விளக்கம் கூறிக் கொண்டு அதை ஏற்றுக் கொண்டனர்.