
தேவையான பொருள்கள்:
முழு உளுந்து – 2 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்.
செய்முறை:
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
உளுந்தைக் நீரில் கழுவி, 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்கவும்.
தண்ணீர் சேர்க்காமல், சாதாரணமாக வடைக்கு அரைப்பதை விடவே அதிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்..
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணை தடவிய இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் தட்டையாகத் தட்டி, நடுவில் துளை இட்டு, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.
அரைத்து அதிக நேரம் வைத்திருந்தால் நிறம் மாறிவிடும். உடனே செய்துவிட வேண்டும்.
சாப்பிட தட்டை மாதிரி கடினமாக இருக்கும். பலநாள்களுக்குக் கெடாது.
துளை வழியாக நூலில் மாலையாகக் கட்டி அனுமாருக்குச் சாற்றலாம்.