Header Banner Advertisement

அபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா


www.villangaseithi.com

print
லமாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் மீது ஒரு மாபெரும் மலை பங்களா இருந்தால் எப்படி இருக்கும்..? இப்படியொரு எண்ணம் சீனப் பேராசிரியர் ஒருவருக்கு ஏற்பட்டது. உடனே அப்படிப்பட்ட மலை பங்களாவை கட்டி ஒட்டுமொத்த அபார்ட்மென்டையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
26 மாடிகள் கொண்ட அபார்ட்மெண்டின் மீது 8,600 சதுரடி பரப்பளவில் பாறைகள் மரங்களை வைத்து, தோட்டங்கள், புல்தரையில், நிலச் சரிவுகள் போன்ற அனைத்துமுள்ள கடலோர கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறாரார், அக்குபஞ்சர் பேராசிரியர் ஜாங் பைகிங். இவர் தற்போது சீன அக்குபஞ்சர் வர்த்தக சங்கத்தின் தலைவராக இருக்கிறாராம். அதோடு ஹைதியன் மாவட்ட அரசியல் ஆலோசகராவும் இருக்கிறார்.

நம்மூர் அரசியல்வாதிகள் போலவே இவருக்கும் சட்டதிட்டங்களை மதிக்காமல் தன் மனம் போனபோக்கில் அபார்ட்மெண்டில் மொட்டை மாடியில் ஒரு கனவு பங்களாவை உருவாக்கிவிட்டார். இது எதுவுமே அப்பார்ட்மெண்ட் நிறுவனத்துக்கோ அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கோ தெரியாமல் நடந்தது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் எதோ அழகுக்காக அபார்ட்மெண்ட் நிறுவனம் இதை செய்வதாகத்தான் ஆரம்பத்தில் நினைத்தார்கள்.

மேலே அளவுக்கதிகமாக பாரம் ஏற்ற ஏற்ற மொத்த கட்டடமும் விரிசல்விடத் தொடங்கியது. குழாய் இணைப்புகளில் பிரச்சனை வர அபார்ட்மெண்ட் வாசிகள் விழித்துக்கொண்டார்கள். தங்கள் அதிருப்தியை பதிவு செய்தார்கள். மொட்டை மாடியில் மலையை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதில் அதிரடி இசையில் லேட் நைட் பார்ட்டி வேறு நடந்ததாம். பொதுவாக இரவு நேரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

மலை பங்களாவில் கட்டிய நீச்சல் குளத்தால் அடிக்கடி கீழேயிருக்கும் வீடுகளில் மழைபோல் தண்ணீர் கசிந்து கொட்டியிருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் 6 வருடங்களாக தனது கனவு பங்களாவை காட்டியிருக்கிறார் இவர்.

சீன ஊடகங்களில் இந்த பங்களாவைப்பற்றி செய்தி வந்த பிறகேதான் அரசு அதிகாரிகளுக்கே இதைப்பற்றி தெரியவந்தது. சீன அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜாங் சிக்கவேயில்லை. ஆனால், ஊடகங்கள் விடாப்பிடியாக விரட்டிப்பிடிக்க, பிரபலமானவர் வருகைக்காக அந்த பங்களாவை உருவாக்கியதாக சொன்னார். ஆனாலும் அவர்மீது சொல்லப்பட்ட எந்த புகாரைப் பற்றியும் அவர் கவலைப்படவேயில்லை. இப்போது அந்த மலை பங்களாவை அகற்றியிருக்கிறார்கள். சீனா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த பங்களா. மிக தாமதமாக ஜாங் ‘இதுவொரு பெரிய தவறுதான்’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.