Header Banner Advertisement

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் (கீழ சிந்தாமணி) தல வரலாறு


NEWS  PHOTO

print

ராமாயணத்தில் சீதையை, ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் ராவணனின் தம்பி விபீஷணன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, ராமருடன் சேர்ந்து ராவணனுடன் போர் புரிந்தான்.

ராமனுக்கு உறுதுணையாக இருந்த குரங்குபடைகள், இந்திரஜித்தின் தாக்குதலில் மயங்கி விழுந்தன. காசியிலிருந்து ஆத்ம சிவலிங்கத்தை எடுத்து வந்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என அனைவரும் கருதினர்.

சிவலிங்கத்தை காசியிலிருந்து எடுத்துவந்தார் விபீஷணன். வழியில் காவிரிக் கரையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு, உச்சிபிள்ளையாரை தரிசனம் செய்தார். பின்னர் இலங்கைக்கு தன்னுடைய பயணத்தை தொடர முடிவு செய்தார்.

ஆனால் ஆத்மலிங்கத்தை தூக்கிய போது அதனை அசைக்க முடியவில்லை. எவ்வளோவோ முயன்றும் முடியாததால், ஆத்மலிங்கத்திற்கு காவிரி கரையில் கோயில் எழுப்பிவிட்டு விபீஷணன் சென்றுவிட்டார்.

இதுவே தற்போது திருச்சி கீழசிந்தாமணி நகரில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோயில் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த கோயில் காவிரிக் கரையில் இருப்பதால் காவிரியில் வெள்ளம் வரும் போது எல்லாம் கோயிலில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்படுகிறது.

குறிப்பாக கோயில் ஸ்தல வரலாறு சம்பந்தமானவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த கோயிலின் பக்க சுவர் ஆற்றின் உள்ளே இருப்பதால் தற்போதும் காவிரியில் ஓடும் தண்ணீர் கோயில் சுவரில் மோதி செல்கிறது.

 தலச் சிறப்பு

 அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கோயிலில் ஐந்து லிங்கமும் ஐந்து அம்பாளும் உள்ள பெருமை உடையது.

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும்,கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.