
பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர்.
இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோயிலாகும்.
இந்தக் கோயில் பற்றி ஒரு சிலரது கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது தாயுமான சுவாமியின் அதிகார நந்தியாக இருந்தது. காலப்போக்கில் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால், நந்தி மண்டபம் தனிமைப்படுத்தப் பட்டது.அதுவே தனிக்கோயில் போல தோற்றமளிக்கிறது என்கின்றனர். தற்போது நந்திக்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகிறது.