
இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு, ஒருமுறை நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்தும், பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.அப்போது, மகான் ஒருவர் மன்னனைச் சந்தித்தார். அவனிடம் மன்னன் தன் பிரச்னையைத் தெரிவித்தான்.
மகான் அவனது அரண்மனை கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகச் சொல்லி, சிவனை வழிபட பிரச்னை தீரும் என்றார். எனவே, மன்னன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இவருக்கு “பூமிநாதர்’ என பெயர் சூட்டப்பட்டது. இதன்பிறகு பிரச்னை தீர்ந்தது. பிற்காலத்தில் அம்பிகை சன்னதி எழுப்பப் பட்டது. இவளை ஜெகதாம்பிகை என்பர்.
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.
வீடு, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் குறை நீங்க இங்குள்ள பூலோகநாதரை வழிபடுகின்றனர்.