
சோழ மன்னர்கள் நடத்திய போரில் ஏற்பட்ட உயிர் சேதத்தால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதுநீங்க தஞ்சாவூர் அருகிலுள்ள திருவிடைமருதூரில் சிவாலயம் கட்டினர். ஆனால், தோஷம் முழுமையாக நீங்கவில்லை.
ஒருமுறை மூன்றாம் குலோத்துங்க சோழனின் கனவில் தோன்றிய சிவன், ஆறு (தீர்த்தம்) வெட்டி, அதன் கரையில் சிவாலயம் கட்டினால் தோஷம் விலகும், என்றார். மன்னனும், காவிரியின் கிளை ஆறாக, உய்யக்கொண்டான் ஆற்றை வெட்டி அதன் தென்கரையில் சிவாலயம் கட்டினான்.
தன்னுடைய முன்னோர் திருவிடைமருதூர் கோயில் தெய்வங்களுக்கு சூட்டிய பெயர்களை இங்கேயும் சூட்டினார். சுவாமிக்கு மத்யார்ஜூனேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாலாம்பிகை என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து தோஷம் நீங்கியதுடன், நீண்ட நாளாக குழந்தை இல்லாத அவனுக்கு புத்திரபாக்கியமும் கிடைத்தது.
தலச் சிறப்பு
உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.
மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறு உள்ள பெண்கள் தங்கள் பிரச்னை தீர இங்குள்ள மத்தியார்ஜுனேஸ்வரரை வழிபடுகின்றனர்.