
சிலர் மீது நல்ல அபிப்ராயமும்..சிலர் மீது மோசமான..மிக மோசமான அபிப்ராயமும் நாம் எல்லோருமே கொண்டிருப்போம்…
அது சரியான முடிவுதானா… சரியற்றதா என்பதை நாம் உணர்கின்றோமோ இல்லையோ…. கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்…
நமக்கு சரியென்பது மற்றவருக்கு சரியல்லை என தோன்றும்..நமக்கு நல்லவராக தெரிபவர்..மற்றவருக்கு மிக மோசமானவராக தெரியகூடும்…
உண்மை நிலையை சரிவர உணர்ந்து யாரும் அந்த முடிவில் இருப்பதில்லை…சந்தர்ப்ப சூழ்நிலைகளும்… காரண காரியங்களுமே பெரும்பாலும் இந்தமாதிரியான முடிவுகளுக்கு முக்கிய காரணமாகின்றன…
அதனால் அவசரபட்டு..யார் மீது என்ன வெறுப்போ..கோபதாபங்களோ இருந்தாலும்..அதனை நேரிடையாக வெளிகாட்டி வெறுப்பேத்த வேண்டாமே…. காயபடுத்தவோ…உண்மை நிலை புரியாமல் தண்டிக்கவோ வேண்டாமே….
அது அவருக்கு மட்டும் மனகஷ்டம் அல்ல..எதோ ஒரு விதத்தில் திருப்பி நம்மையும் நம்மை சேர்ந்தவர்களையும் பாதிக்க வாய்ப்பாக இருந்துவிடும்….
நமக்கே தெரியாமல்..நமது அரியாமையினாலும்… தவறான செய்திகளாலும்..பிறரை நோகவைத்து..அவரை துன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடுவோம்…
மிகவும் ஜாக்ரதையாக இருப்பது நல்லது..யாரையும் எடைபோடுவதற்குமுன்…
துன்பமும்..வேதனையும்..மனகஷ்டமும்..நமக்கிருப்பது போலவேதான்..மற்றவருக்கும்… மனம் என்பது எல்லோருக்குமே ஒன்றுதான்….
நம்மைபோலவே..நம் நிலையை போலவே மற்றவரையும் ஒரு நிமிடம் அவசரபடாமல் சிந்தித்தோமானால்..இப்படிபட்ட தவறுகளை நம்மையறியாமல் செய்வது தவிர்க்கப்பட்டுவிடும்…
நமக்கும் நம்மை சேர்ந்தவர்களின் மகிழ்ச்சிக்கு அமைதிக்கு என்றுமே குறைவிருக்காது…