
தற்பெருமை எப்படி வீழ்ச்சிக்கு முதற்படியாக உள்ளதோ…
அப்படியேதான்… நம்மைபற்றிய குறைவான மதிப்பீடு கொண்டிருத்தலும்…
நம்மை வெற்றியின் வாயிலை நெருங்கவே விடாது….
எல்லாம் எனக்கு இது போதும்….. அய்யயோ..என்னால இதெல்லாம் முடியவே முடியாது…
எனக்கு அதெல்லாம் கிடைக்குமா..முடியுமா…
என்ற வார்த்தைகளும் எண்ணங்களும்..
.நம்மிடம் இருக்கும்வரை என்னதான் குட்டிகரனம் போட்டாலும்..அங்கலாய்த்தாலும்..
வெற்றியடைதலோ..மன அமைதி அடைதலோ சற்று கடினம்தான்…
வீன் டம்பமோ..தற்பெறுமையோ வேறு..
நம்மைபற்றிய குறைவான மதிப்பீடு வேறு…
வித்தியாசம் புரிந்து செயல்படுதல் நலம்….
இந்த புதிய உலகில்..போட்டிகளும்..பொறாமைகளும் நிறைந்த வழிதடத்தில்..நம்மைபற்றிய நல் மதிப்பீடு அவசியம்….
ஒரு நேர்முக தேர்வுக்கு செல்லும்போதோ..நமது காரியத்திற்காக ஒருவரிடம் செல்லும்போதோ…
நமது முகம் அதனை பிரதிபலிக்கும்…. நமது காரியத்தை பலிதமாக்கும் சக்தி அதற்கு உண்டு….
எதிரிலிருப்பவரை கவர்ந்திழுத்து அந்நிச்சையாக நம்மை ஓகே செய்யும் வாய்ப்புகள்கூட உண்டு….
எனக்கு ஏன் எதுவுமே சரியாக நடக்கமாட்டிங்குது…. நான் ஏன் இப்படியே இருக்கிறேன்…
எனக்கு மட்டும் அதிர்ஷ்டமே இல்லை என்பவர்கள்…அதனை கொஞ்சம் மாற்றி…
தம்மிடம் உள்ள நிறைகளை பட்டியலிட்டு..
தம்மால் என்னவெல்லாம் இயலும் என்று யோசித்து ஆஹா …
சபாஷ் என்று சந்தோஷபட்டு பாருங்களேன்…
ஆச்சரிய படவைக்கும் விஷயங்களெல்லாம் நடந்தேறும்…
தமது பார்வையிலும் நடவடிக்கைகளிலும்… மாற்றங்கள் ஏற்படும்….
முயற்சிப்போம்….