Header Banner Advertisement

ஆண்களின் மோசமான குணம்..!


villangaseithi-tamilnewswebsite-img01

print
ண்களின் மோசமான குணங்களில் ஒன்று ‘ரோடு ரேஜ்’. வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் இது. இந்த குணத்தை ரோடு ரேஜ் என்கிறார்கள் உளவியலாளர்கள். 1987-ம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சாலையில் ஒரு படப்பிடிப்பை நடத்தியது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், மோசமான சைகைகளைக் காண்பிப்பதும், வெறித்தனமாக வாகனங்களை ஓட்டுவதும் நடந்தது. அப்போதுதான் இத்தகைய செயலுக்கு ‘ரோடு ரேஜ்’என்ற புதிய பெயரைக் கொடுத்தார்கள்.
ரோடு ரேஜ் என்ற வகையில் முரட்டுத்தனமாக டிரைவ் செய்தல், சடன் பிரேக், சடன் ஆக்ஸலரேஷன், வாகனத்தை மோதுவது போல் பின்னால் நெருக்கமாக ஒட்டி வருவது, ரோட்டின் ஒரு லேனில் இருந்து மறு லேனுக்கு மாற்றி ஓட்டுவது, மற்ற ஓட்டுநர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு வாகனத்தை ஓவர்டேக் செய்யாமலும், பின்புறம் செல்லாமலும் சரிசமமாக ஓட்டிவருவது, எதிரே வாகனங்கள் வந்தாலும் அப்படியே தொடர்வது, சாலைகளை பிரிக்கும் மீடியன்கள் மீது ஓட்டுவது, சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் ஓட்டுவது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவது, சாலையில் செல்பவர்கள் மீது மோதுவது போன்ற எல்லாவகை அத்துமீறல்களும் ரோடு ரேஜ் வகையில் சேர்க்கிறது.

அமெரிக்காவில் வருடத்திற்கு 1200-க்கும் மேற்பட்ட ரோட் ரேஜ் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சரியாக 33 வயது ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.ரோட் ரேஜ் வழக்குகளில் 97 சதவீதம் ஆண்களாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே இது ஆண்களுக்கான குணம் என்று தெரியவந்தது. சரி, இது எப்படி ஆணுக்கு மட்டும் ஏற்படுகிறது?

இதுவும் ஆதி ஆணின் மரபு வழியே பெற்ற குணம்தான். வேட்டையில் போட்டிபோடுவது மனிதனுக்கு பிடிக்கும். தன்னைவிட யாரும் முதன்மையாக வந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பான். இன்றைக்கு வேட்டையில்லை. ஆனால் பிடிவாதம் இருக்கிறது. வாகனம் ஓட்டுவது ஆண்களுக்கு ஒரு வேட்டையாடுவது போலவும் பந்தயம் போலவும் ஒரு போட்டியாகத்தான் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், இன்றைய மனிதர்களிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் போய்விட்டது. பெரும்பாலான ஆண்களுக்கு போதிய தூக்கம் இல்லை. உதவும் மனப்பான்மையும் இல்லை. தங்கும் இடமும் வேலைப் பார்க்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளது. பலருக்கு வேலைக்குப் போவதே ஊருக்கு போவதுபோல் இருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருப்பதால் டென்ஷன் அதிகரிக்கிறது. வீடும், வேலை செய்யும் இடமும் அருகருகே இருக்கும்படியாக அமைத்துக் கொண்டால் ரோட் ரேஜ் குறைகிறது என்று மனநல ஆய்வு சொல்கிறது. அதனால் நல்ல மனநிலையோடு வாகனம் ஓட்டும்போது ரோட் ரேஜ் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
விபத்துகள் நடப்பதற்கு இந்த மனநிலை காரணமாக அமைகிறது. இதுபோக மனநிலையின் மாற்றமும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன. சாலைகள் வளைந்து நெளிந்து போகும்போது இருந்த விபத்துகளின் எண்ணிக்கையைவிட இப்போது அதிகம். இதற்கு மனநிலை மாற்றமும் ஒரு காரணம். நான்கு வழிச்சாலைகளில் ஒரே மாதிரியான நிலமைப்பு தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது. ஒரே மாதிரியான சாலை அமைப்பு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, வெட்ட வெளி, கடைகள் இல்லாத வனாந்திரப்பயணம் செய்வது போல் இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைத்துவிடும்.
தொடர்ந்து இதேபோன்று மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டும்போது வண்ணங்கள் மங்கத் தொடங்கும். பகலிலே இருள் சூழ்ந்ததுபோல் தெரியத் தொடங்கும். இவையெல்லாமே விபத்துக்கு வழிவகுத்துவிடும். இவையெல்லாமே ரோட் ரேஜ் என்ற ஆண்களின் மனநிலையால் ஏற்படும் விபத்துகளாகவே உளவியல் சொல்கிறது. இதுபோக உடல்நிலை காரணமாக ஏற்படும் விபத்துகளும் உண்டு. இதில் பெரும் இடத்தப் பிடித்திருப்பது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதுதான். இவற்றையெல்லாம் மாற்றினால் விபத்துகள் குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.