Header Banner Advertisement

ஆலூ கோபி செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் – அரைக்கிலோ
உருளைக் கிழங்கு – 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி (விரும்பினால்)
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசுரி மேத்தி – 1 டீஸ்பூன் ( Kasuri Methi –விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

தாளிக்க: எண்ணெய், சீரகம்.

செய்முறை:

உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சற்றே பெரிய துண்டுகளாகப் பிரித்துக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.

பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து, பொன்னிறமானதும், தக்காளி, காலிஃப்ளவர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.

மேலே தனியாத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.

காலிஃப்ளவர் வெந்து நீர் வற்றும்வரை அவ்வப்போது திறந்து, கிளறிவிடவும்.

விரும்பினால் இறக்குமுன் கரம்மசாலா, கசுரி மேத்தி( Kasuri Methi) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை நறுக்கிக் கலந்து பரிமாறவும்.

கரம் மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் அதற்குப் பதில் மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய் சாதம், சீரக சாதம் போன்ற சாதம் வகைகளுக்கு உபயோகிக்கலாம்.

சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் பொருந்தும்.