Header Banner Advertisement

ஆல்பம் – சீமக்காரங்களோட ஒரு பொங்கல்


MGM copy

print
வ்வொரு வருஷமும் மதுரைக்கு பக்கத்துல ஏதாச்சும் ஒரு கிராமத்துல சீமக்காரங்களோட சேர்ந்து பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம். சுற்றுலாத் துறதான் இத ஏற்பாடு செய்யும். நாலு வருஷத்துக்கு முன்னால இதுல கலந்திகிட்டு, புடிச்சதுதான் இந்த படமெல்லாம்..
பொங்கலன்னிக்கு துவரிமான் கிராமத்துக்கு பஸ்சுல கிளம்பினாங்க வெள்ளைக்காரங்க..
ஊருக்குள்ள மாட்டுவண்டி தான்..! 
‘நாங்களும் மாட்டுவண்டி ஓட்டுவோமில்ல..!’
‘எங்களுக்கும் கரகமாட வரும்!’
‘இரு புள்ள ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்..!’
‘எங்க ஊரு டான்ஸ் எப்படி?’
‘தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியே இருக்குலே..!’
‘எம்பூட்டு அளகா சிரிக்குது..!’
‘மவராசி..!’
‘திஸ் இஸ் ஸ்ட்ரீட் பெயிண்டிங்..!’
‘எப்பப்பா சாப்பாடு போடுவீங்க..?’
‘பொங்கல் ரெடி..!’
‘வெளுத்து கட்ட வேண்டியதுதானே..!’
‘தின்னது செரிக்க வேண்டாமா..?’
மறுநாள்
பாலமேடு ஜல்லிக்கட்டு
‘வெரசா சாப்புடு புள்ள சல்லிகட்டுக்கு போவோனும்..!’
 
‘எப்படியோ துண்டப் போட்டு எடத்த புடிச்சிட்டோம்..!’
‘அடி.. ஆத்தீ..!’ 
‘அசந்த நேரமா பாத்து சாச்சி புடிச்சே..!’
‘சிங்கம் கொட சாஞ்சிருச்சு மாப்ளே..!’ 
‘என்கிட்டேயேவா..?!’
‘எல்லாம் வாங்க போட்டா புடிக்கிறாங்க..!’
 
இந்த படங்களில் உள்ள கமெண்டுகள் எல்லாம் படம் எடுக்கும் போது என் காதில் விழுந்தவை.