Header Banner Advertisement

இஞ்சியின் மருத்துவ குணம் !


www-villangaseithi-com

print

உணவில் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறப்பம்சங்கள் கொண்ட இஞ்சி ஆனது குடலில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக திகழ்கின்றது என புதிய ஆய்வு ஒன்றில் நிரூபணமாகியுள்ளது.

இது தவிர புற்றுநோய்கள் உண்டாவதை தடுக்கும் வல்லமையும் இந்த இஞ்சிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Atlanta Veterans Affairs Medical Center மற்றும் Georgia State University ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இஞ்சிகள் மைய நீக்கல் முறை மற்றும் அல்ட்ரா சொனிக் ஒளிச்சிதறல் என்பவற்றினைப் பயன்படுத்தி 230 நானோ மீற்றர் துண்டுகளாக்கி ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடல்களில் உண்டாகும் நீண்டகால மற்றும் குறிய கால வீக்கங்களை இலகுவாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாரம்பரிய மருத்துவத்தில் இன்றுவரை உணவுச் சமிபாட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு இஞ்சி சாறு நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.