
பஞ்ச தந்திரங்களில் எதுவுமே நல்ல விஷயங்கள் அல்ல. நட்பைக்கெடுத்து பகை உண்டாக்குதல் – மித்திர பேதம். தங்களுக்கு சமமானவர்களுடன் மட்டும் நட்புகொண்டுவிடுவது – சுகிர்ல லாபம். பகைவரோடு உறவு வைத்து அழிப்பது – சந்திர விக்ரகம். தன் கையில் கிடைத்த பொருளையோ மற்றவர்களையோ அழித்துவிடுவது – அர்த்த நாசம். தீர விசாரிக்காமல் ஆலோசிக்காமல் காரியம் செய்வது – அஸம்பிரேட்சிய காரித்துவம். இவை தான் பஞ்ச தந்திரம்.
சுதர்சன நாட்டு மன்னனுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் தவறாக வளர்ந்ததாகவும், அவர்களைத் திருத்துவதற்காக விஷ்ணு சர்மா என்ற ஞானி சொன்ன கதைகள்தான் பஞ்ச தந்திரக் கதைகளாக சொல்லப் பட்டன. வேடிக்கைக் கதைகள் எப்படி வாழக்கூடாது என்பதே பஞ்ச தந்திரம் சொல்லும் நீதி.