
‘அட போங்கப்பா, தியேட்டர்ல போய் யார் இரண்டரை மணி நேரம் உக்காந்து படம் பார்க்கறது. கொஞ்சம் ரிலாக்ஸா படுத்துட்டு பார்த்த எப்படியிருக்கும்.’ நாம இப்படி யோசிக்கும் போது தியேட்டர்காரங்க யோசிக்க மாட்டாங்களா! யோசிச்சுட்டாங்க
வீட்டுக்குள் தொலைக்காட்சி வந்தபின் நம் மக்கள் மனதில் தோன்றிய எண்ணம் இது. மேலும் நமது உடலும் சொகுசுக்கு பழகிவிட்டதன் வெளிப்பாடு. இந்த மக்களின் பழக்கத்தை காசாக்க தியேட்டர்களும் முடிவு செய்துவிட்டன. உலகம் முழுவதும் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. கீழே படத்தில் உள்ளது லண்டனில் உள்ள எலக்ட்ரிக் தியேட்டர். எப்படியொரு வசதி பாருங்கள்.
![]() |
எலக்ட்ரிக் தியேட்டர் லண்டன் |
இந்த பிரசாத் ஐமாக்ஸ் தியேட்டர் ஒன்றில் நான் படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதன் பெயர் ‘பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன்’. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய திரை கொண்ட வரிசையில் இரண்டாவது தியேட்டர். இந்த ஸ்க்ரீனின் உயரம் 72 அடி அகலம் 95 அடி. பிரமாண்டமான திரையில் படம் பார்க்கவேண்டும் என்பதற்காகவே படத்திற்கு போனேன். அது ஒரு ஆங்கிலப் படம். டிக்கெட் விலையோ ரூ.450.
![]() |
பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன் |
![]() |
சிட்னி ஐமாக்ஸ் தியேட்டர் |
படுத்துக்கொண்டே படம் பார்க்கக்கூடிய மேலும் சில தியேட்டர்கள்.
![]() |
வெல்வெட் கிளாஸ் சினிமா, இந்தோனேஷியா
|
![]() |
ரூப்டாப் சினிமா, லாஸ் ஏஞ்சலீஸ் |
![]() |
பில்லோ சினிமா, லண்டன் |
![]() |
பர்சியன் மியூசிக் ஹால், ஒலிம்பியா |
ஜெர்மனியில் உள்ள இந்த தியேட்டர் சினிமாவுக்கும் நாடகத்திற்கும் பெயர் பெற்றது. பெரிய ஸ்டேடியத்தில் அமர்ந்து பெரும் கூட்டத்துடன் படம் பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கும். மொத்தம் 2,600 இருக்கைகள். உள் அலங்காரத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும் தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
நம்மூரில் ரூப்டாப் ரெஸ்டாரன்ட் பற்றிதான் தெரியும். ஆனால் இங்கு ரூப்டாப் சினிமாவே உள்ளது, மொட்டை மாடியில் வட்ட வடிவத்தில் தொட்டிகள் நிறைய இருக்கும். அதில் கதகதப்பான வெந்நீர் நிரப்பப்பட்டிருக்கும். அதற்குள் அமர்ந்தபடி, மது அருந்திக்கொண்டே, பிடித்த துணையோடு படம் பார்க்காலாம். நீச்சல் உடை மட்டுமே அனுமதி. அதுவும் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
![]() |
ஹாட்டப் சினிமா, மான்செஸ்டர் |