
அதேபோல்தான் இப்போது நிலமில்லாமல் விவசாயம் செய்யலாம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், வருங்கலத்தில் இந்த தொழிநுட்பம் சர்வ சாதாரணமாக நடக்கும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது செயல்படாத நிறுவனம் ஒன்றை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் ‘ஃபிளாப்பி டிஸ்க்’ என்ற ஒரு வஸ்து பயன்படுத்தப் பட்டது. இன்றைய மெமரி கார்டுகளுக்கெல்லாம் முன்னோடி அது.
டாக்குமெண்ட் ஃபைல்கள் சேமித்து வைப்பதில் பெரும் பங்காற்றியது. ஒரு பிளாப்பி டிஸ்கில் 2.88 எம்.பி. டாக்குமெண்டுகளை சேமித்துவைக்க முடியும். இன்றைய மெமரி கார்டுகளோடு இதை ஒப்பிட்டால் யானையோடு சித்தெறும்பை ஒப்பிடுவது போலத்தான்.
பின்னாளில் சிடி பயன்பாட்டுக்கு வந்தப்பின் இவற்றின் தேவை முற்றிலும் குறைந்து போனது. இவற்றை தயாரித்த நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவிழா கண்டன. அப்படி மூடிய ஃபிளாப்பி டிஸ்க் தயாரிப்பு கம்பெனியில்தான் இந்த நவீன விவசாயத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பிரபலமான தோஷிபா நிறுவனம்.
சூரிய ஒளிக்குப் பதிலாக ட்யூப்லைட் மற்றும் எல்இடி விளக்குகளை வைத்து சூரியஒளியில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள். மினரல் வாட்டர் போன்ற சுத்தமான நீர் செடிகளுக்கு பாச்சப்படுகிறது. காற்றுக்கூட கண்ட்ரோல் செய்யப்பட்டு சுத்தமான காற்றே தரப்படுகிறது. வெப்பநிலையும் செடிகளுக்கு உகந்த அளவில் கொடுக்கப்படுகிறது. மண்ணும் செயற்கை மண் மற்றும் தேங்காய் நார் துகள்கள்தான்.
மருத்துவத்திற்கு பயன்படும் ‘லெட்டுஸ்’ இலைகள் ஒரு நாளைக்கு 8,400 என்ற கணக்கில் ஆண்டுக்கு 30 மில்லியன் இலைகள் என்று கணக்கிட்டு பயிர்செய்து வருகிறார்கள். இதன்மூலம் வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று தோஷிபா தெரிவிக்கிறது. மேலும் மூலிகைகள் வளர்ப்புக்கு இந்தமுறை ஏற்றது என்கிறது.
தற்போது கீரை தக்காளி போன்ற சிறிய வகை செடிகளை இந்த முறையில் வளர்க்கப்படுகின்றன. வருங்கலத்தில் மற்ற பயிர்களும் இந்த முறையில் வளர்க்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எப்படியோ விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்தக் காலத்தில் இந்த நவீன விவசாயமுறை கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! இதன் சாதக பாதகங்களை..!