Header Banner Advertisement

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..!


004

print
நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. அதற்கு தோதாக புதுப்புது உணவுப் பொருட்களும், மருந்துகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. அதிலும் இரண்டாம் கட்ட நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசிப் போட்டுக்கொண்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் மாத்திரை வடிவிலும், திரவ வடிவிலும் இருக்கும்போது, இன்சுலின் மட்டும் இன்னமும் ஊசி மூலம் செலுத்த வேண்டிய நிலையே  இருக்கிறது. தினமும் ஊசிப் போட்டுக்கொள்ளும் வலியில் இருந்து விடுதலை தருகிறது,‘காஸ்டஸ் பிக்டஸ்’ என்ற இன்சுலின் செடி.
இன்சுலின் செடியின் மலர்
இதுவொரு அழகான செடி. இதன் இலை ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாறை மட்டும் விழுங்கிவிட்டு, சக்கையை துப்பிவிட்டால் போதும். இந்த இலை ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு நில்லாமல் இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் படிப்படியாக குறைக்கிறது. இதை சாப்பிடுவதால் எந்தவொரு பக்கவிளைவும் இல்லை என்பது ஆறுதலான மற்றொரு செய்தி.

இன்சுலின் செடியின் இலைகள்
சர்க்கரை நோய்க்கு அரும்பெரும் மருந்தாக விளங்கும் இந்த இன்சுலின் செடியை பயிரிட்டு நல்ல வருமானம் பார்க்கலாம். வருங்கால விவசாயமும் இதுதான் என்று சொல்கிறார். டாக்டர்   தேவேஷ் ஹார். இவர் கால்நடை இனவிருத்தி ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெல்லியில் முதன்மை விஞ்ஞானியாக வேலைப் பார்த்து ஓய்வுப் பெற்றவர்.

புதிது புதிதாக தாவரங்களை உருவாக்குவது, வேளாண் காடுகளை அமைத்துக் கொடுப்பது என்று பிசியாக இருந்த டாக்டர் ஹாரை அவரது பண்ணையில் சந்தித்தேன். வத்தலக்குண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் கொடைக்கானல் மலைப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இவரது பண்ணை இருக்கிறது. 20 ஏக்கர் விவசாய நிலத்தை வேளாண்மை சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இந்த இடம் கொடைக்கானல் சுற்றுலா செல்பவர்களின் விருப்பமான இடங்களில் ஒன்றாக மாறக்கூடும்.

தோட்டத்திற்குள் செல்லும் சாலை
டாக்டர் ஹார் தனது 20 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் கற்றாழையும், 2 ஏக்கரில் மூக்கிலும் 3 ஏக்கரில் எலுமிச்சையும், மீதி இடத்தில் வேம்பு மற்றும் பதிமுகம் மரங்களை நட்டுள்ளார். இவரது பண்ணையில் ஒரு 20 சென்ட் நிலத்தில் இன்சுலின் செடியைப் பயிரிட்டுள்ளனர். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “இன்சுலின் செடி என்று பேச்சு வழக்கில் அழைத்தாலும் இதன் தாவரப் பெயர் ‘காஸ்டஸ் பிக்டஸ்’ என்பது. இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணம்தான் இதன் தாயகம். ஆனாலும், இது மிகவும் புகழ் பெற்றும் முக்கியத்துவம் பெற்றும் விளங்குவது மெக்ஸிகோ மற்றும் கோசடாரிகா நாடுகளில்தான்.

மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்று விளங்கும் இந்த தாவரம், இந்தியாவில் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை வேலூரில் கொஞ்சமும், கன்னியாகுமரியில் கொஞ்சமும் பயிரிட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. விளைச்சலோ மிகக் குறைவு. அதற்கு காரணம் இந்த பயிரைப்பற்றி அதிகமாக தெரியாததே.

டாக்டர் தேவேஷ் ஹார்
இன்சுலின் செடியின் இலை மூலம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் அதிகளவில் உள்ளன. ஒரு நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு 500 கிலோ இலை தேவைப்படுகிறது. அந்தளவிற்கு இங்கு உற்பத்தியில்லை. தேவை அதிகமுள்ள விளைபொருளை விவசாயிகள் விளைவித்தால்தான் அதிக லாபம் பார்க்கமுடியும்.

இந்த செடி பயிரிடுவதற்கு நல்ல வளமான ஈரப்பதம் உள்ள நிலம் போதும். சூரிய ஒளிப்பட்டால் இதன் இலை பட்டுப்போய்விடும். அதனால் சூரிய ஒளியில் இருந்து காப்பதற்காக பசுமைக் குடில் அமைக்க வேண்டும். இது ஒன்றுதான் இந்த விவசாயத்தில் செலவு பிடிக்கும் அம்சம். குறைந்த நிலப்பகுதியில் அதிக லாபம் பெற ஏற்ற விவசாயம் இது.

இன்சுலின் செடி மலைக்காடுகளிலும் நீர்நிலைகளிலும் 10 அடிக்கு மேல் வளரக்கூடியது. இலைகள் ஓரளவுக்கு மா இலைகள் போல் இருக்கும் பார்வைக்கு குரோட்டன்ஸ் போல் தோற்றம் தரும். அதனால் வீட்டிலும் வீட்டுத் தோட்டத்திலும் அழகுக்காக இந்த செடியை வளர்க்கலாம். இந்த செடிக்கான நாற்றுகளை நானே தயார் செய்கிறேன்.

இன்சுலின் செடி நாற்றுகள்

ஒரு நாற்று ரூ.3 விலையிலிருந்து கிடைக்கிறது. நாற்று நட்ட 45 முதல் 60 நாட்களில் செடி தயாராகிவிடும். 6 மாதத்தில் முதல் கட்டிங் செய்யலாம். இலைகளை மட்டும் எடுத்தால் போதும், 20 செண்டில் ஒருமுறைக்கு 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 4 மாதத்துக்கு ஒருமுறை இப்படி அறுவடை செய்யலாம். இரண்டு வருடம் முடிந்ததும் முழுவதுமாக எடுத்துவிட்டு, மீண்டும் புதிய நாற்றுகளை நடலாம். ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும்.

ஒருமுறை மட்டும் நாற்றை வாங்கினால் போதும். மறுமுறை நாமே நாற்றை தயாரித்துவிடலாம். செடியின் தண்டுப் பகுதியை 4 அங்குல நீளத்திற்கு வெட்டி கரும்பு நடுவது போல் நிலத்தில் நட்டால் போதும் செடி வளர்ந்துவிடும். இதற்கு பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை.

காலை ஒருமுறை மாலை ஒருமுறை தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளித்தால் போதும். செம்மண் பூமியாக இருந்தால் இதன் மகசூல் இன்னும் அதிகமாகும். தற்போது ஒரு கிலோ இலை 50 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். வருங்காலத்தில் இதன் தேவை மிக அதிகமாகும் என்பதால் இப்போதே பயிரிடுவது நல்லது.

இன்சுலின் செடியை வளர்ப்பதற்கான பயிற்சியை இலவசமாக தருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று அல்லது நான்கு நாற்றுகளை வாங்கி பூந்தொட்டியில் வைத்து வளர்க்கலாம். சூரிய ஒளி நேரடியாக படாத இடத்தில் அதேவேளையில் சூரியஒளியின் பச்சையமும் கிடைக்கும் விதத்தில் செடியை ஜன்னலோரத்திலோ மாடிப்படிகளிலோ வீட்டின் உள்ளேயே இதனை வளர்க்கலாம்.

முழுமையான நிழலிலும் இது வளராது. சூரியஒளியின் தாக்கமும் கொஞ்சம் இருக்க வேண்டும். சூரியஒளியும் நேரடியாக படக்கூடாது. மெல்லிய துணியை கொண்டு சூரியஒளியின் கடுமையை குறைக்கலாம். இந்த இன்சுலின் செடியின் இலையை தினம் ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாம். இதற்கு எந்தவித பெரிய செலவும் இல்லை. முக்கியமாக பக்கவிளைவுகள் இல்லை.” என்று உற்சாகம் பொங்க கூறி முடித்தார் டாக்டர் தேவேஷ் ஹார்.

விவசாயிகள் இந்த செடியை பயிரிட்டு நல்ல லாபத்தைப் பெறலாம். சர்க்கரை நோயாளிகள் வீட்டில் பூந்தொட்டியில் வளர்த்து தங்கள் நோயை கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

டாக்டர் தேவேஷ் ஹாரை தொடர்பு கொள்ள கீழேயுள்ள மொபைல் எண்ணை அழுத்தவும்.
+91 98421-97977

டாக்டர் தேவேஷ் ஹார் சிறந்த ஓவியரும் கூட இவர் தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு சிறிய ஆர்ட் கேலரி ஒன்றை தனது இடத்தில் வைத்திருக்கிறார். செம்பு கம்பிகள் கொண்டு வரையப்படும் ஓவியங்களை நிறைய உருவாக்கியிருக்கிறார். இந்த வகையில் வரியும் ஓவிய முறையை உலகில் வேறுயாரும் செய்யவில்லை என்கிறார். இதுபோக பாட்டில்களில் ஓவியம், மரத்தில் ஓவியம் என்று வகைவகையாய் ஓவியங்கள் வரைந்து வைத்து அசத்துகிறார்.

ஆர்ட் கேலரி
பாட்டிலில் ஓவியங்கள்
வண்ண ஓவியம்
செம்புக் கம்பியில் உருவாக்கப்பட்ட ஓவியம்
மரத்தில் வரைந்த புடைப்பு ஓவியம்

குழுவாக கொடைக்கானல் வருபவர்கள் கையோடு கட்டுசாதம் கொண்டு வந்திருந்தால் அவர்கள் இயற்கை சூழலில் அமர்ந்து சாப்பிட அருமையான நிழற்குடைகளை அமைத்திருக்கிறார். எதிர்காலத்தில் சிறிய உணவகம் வைப்பதாகவும் எண்ணம் இருக்கிறது. ஒரு விஞ்ஞானியை விவசாயியை சிறந்த ஓவியரை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்து புறப்பட்டேன்.