
“ஆலால கண்டா…! ஆடலுக்கு தகப்பா…!!வணக்கமுங்க!”.
”ஆருத்ரா அபிசேகம்
“சிதம்பரம் உமைபார்வதி உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்”…..
இங்கு நடராஜ பெருமானின் சிறப்பால் “சிதம்பரம் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் திருக்கோயில்”என்று வழங்கப்படுகிறது..சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் தீட்சிதர்கள்[தில்லைவாழ் அந்தணர்கள்] திருகைலைமலையில் இருந்து ஈசனால் அழைத்து வரப்பட்டவர்கள்..இந்த தீட்சிதர்களில் ஒருவராக இன்றும் நம் ஈசன் இருக்கிறார்.
“தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்”என்கிறார் நம் சுந்தரர். இதனை உணர்ந்து தீட்சிதர்களையும் வணங்கி திருமூலநாதர்,சொர்ணபைரவ்ர் ,நடராஜர் வழிபாடு செய்து அருள் பெறுஓம்…….
சைவத்தில் “கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊரின் பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். பஞ்ச பூதத் தலங்களில் இது ஆகாயத்தலம்…மீண்டும் பிறவி வலையில் சிக்காமல் இருப்பதற்காக இந்தப் பிறவியில் நல்லவனாக வாழ்ந்து,ஈசனின் பெருமை பேசி ,நம் வினைகளை நீக்கி மீண்டும் பிறவா நிலையை நாம் அடையவேண்டும் என்பதற்காக ஈசன் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறான்,அதுவே இப் பிறப்பு . .
சாதாரண பாமர மனிதன் தொடங்கி அருளாளர்கள் வரை மீண்டும் பிறக்க வேண்டாம் என்றே விரும்புகின்றனர்.பிறவியைத் துன்பம் என்றும், நோய் என்றும் வருணிப்பர்.
ஆனால் மீண்டும் பிறக்க விரும்பியவர் ஒருவர் உண்டு. அவர்தாம் நமது வாகீசர் அப்பர் பெருமான். ஈசனுடைய பேரழகைக் காணவும் ,அவனது ஆனந்த நடனத்தை ரசிக்கவும் அவனை அனுபவிக்கவும் வேண்டுமானால்,”மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”என்றார்.
ஆம்!”குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல்மேனியில் பால் வெண்ணீறும்,இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்,மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”என்கிறார் ..
யார் அவர் ?!…
நம் அப்பர் திருநாவுக்கரசர் ……
குனித்த புருவமும் – வளைந்த புருவமும் .,சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,பனித்த சடையும்- (பனி – நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக பூசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் – ஒரு காலைத் தூக்கி தில்லையில் ஆடும் நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் – மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் – பெரிய உலகில்…..
அதாவது சான்றோர்கள்,முனிவர்கள் பொதுவாக மனித பிறவி மீண்டும் வேண்டாம் என்பார்கள்..ஆனால் சிதம்பரத்தில் நடனமிடும் நம் நடேசனின் அழகைக் காண இன்னொரு மனித பிறவியும் வேண்டும் என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர் …
அனைத்து சிவாலயம்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் தினமும் அந்தந்த சிவாலய அர்த்தஜாம பூஜைக்கு பின் சிதம்பரம் நடராஜரிடமே ஒடுங்குகின்றனவாம்.மீண்டும் அதிகாலையில் சிவகலைகள் அனைத்தும் சிதம்பரம் நடராஜரிடம் இருந்து அந்தந்த சிவாலயமூர்த்திகளை சென்றடைகின்றனவாம். சொர்ண பைரவரின் ரிஷிமூலம் சிதம்பரம்.குருநமச்சிவாயருக்கு ம், தீட்சிதர்களுக்கும் தரிசனம் தந்த ஸ்ரீ சொர்ண பைரவரின் திருவடிவம் தில்லை பொன்னம்பலத்தில் சிற்சபையில் கீழ்ப்புறத்தில் இருக்கிறது.திருவிழாக் காலங்களில் இந்த சொர்ணாகர்ஷண பைரவரைக் கனகசபையில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
ஸ்ரீ சொர்ண பைரவருடைய வழிபாட்டில் சொர்ண லாபமும், பயம் நீங்கியும், சர்வ அட்ட சித்தியும் ஏற்படும், பொன்னும் மணியும் குவியும் என பெரியோர் கூறுவர். சிதம்பரம் நடராஜர் சன்னதி மிக அருகில் உள்ள ஸ்ரீ சொர்ண பைரவர் மந்த்ரம் இதோ :..
“ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிதம்
வேதரூப சாரமேவ ஸம்யுதம் மஷேச்வரம்
ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்தஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே”.
இந்த மந்திரத்தை காலை மாலை தினமும் தீபம் ஏற்றி நடராஜரையும்,சொர்ணபைரவரையும் நினைத்து 108 முறை சொல்லிவர வெகுவிரைவில் பொன்,பொருள் ,செல்வம்,நவமணிகள் ,பணம்குவியும்
“தில்லையம்பல நடராஜா…. செழுமை நாதனே பரமேசா..
.அல்லல் தீர்த்தாடவா வா வா…
அமிழ்தானவா”.
.”சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட,அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”..
“வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”
.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”..கட்டுரையாக்கம்:
சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்