Header Banner Advertisement

இலவச குடிநீரை விற்கும் கொள்ளைக்காரனை ஊக்குவிக்கும் மதுரை மாநகராட்சி


001

print

 

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராத காரணத்தாலும், ஒரு சில பகுதிகளில் சாக்கடை கலந்த நீர் கலந்து வருவதாலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியால் மாநகராட்சி நிர்வாகம் இலவச குடிநீரை ஒப்பந்த லாரிகள் மூலம் தற்போது வழங்கி வருகிறது.

அவ்வாறு லாரிகள் மூலம் இலவச குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்த கொள்ளைக்காரன் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் அல்லகைகள் மூலம் ஐந்து குடம் தண்ணீரை பத்து ரூபாய்க்கு விற்று தடாலடி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வசூல் வேட்டையில் ஈடுபடும் தண்ணீர் கொள்ளைக்கார அல்லக்கைகளிடம் இலவச குடிநீருக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என எவராவது தட்டிக் கேட்டால் பொதுமக்கள் மத்தியில் அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்துகின்றனராம்.

அத்துடன் அந்த அல்லக்கைகளிடம் பணம் கொடுக்கா விட்டால் இலவச குடிநீரை கொடுக்க மறுத்து நீ என்ன பெரிய புடுங்கியா ? போய் புகார் செய்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் சென்று புகார் கொடுப்ப.. உன்னால் முடிந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடு. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கொக்கரிப்பு வேறு செய்கிறதாம். மேலும் பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ததாக மாநகராட்சிக்கு கணக்கு காட்டிவிட்டு பெரும் பண முதலைகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு அந்த குடிநீரை சப்பளை செய்யும் பணி அட்டகாசமாக நடக்கிறதாம் .

இதுஒருபுறம் இருக்க மதுரை மாநகராட்சி வார்டு எண்  77 க்குட்பட்ட வசந்தநகர், ராமலிங்கநகர் 3வது குறுக்கு தெருவில் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே வீடுகளில் கொடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதே கிடையாது என பல புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளதாம்.

பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தாலும் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி குழாய்களில் குடிநீர் வர நடவடிக்கை எடுக்கப் பட்டு விட்டதாக கூறிவிட்டு சென்று விடுகின்றனராம்.அதன் பின்னர் ஒரு சில நேரங்களில் எப்போதாவது குடிநீர் வந்தாலும் சாக்கடை கலந்த நீர் சிறிது நேரம் வந்து விட்டு நின்று விடுவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அதை சரிசெய்ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதியில் வசிப்பவர்களால் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக மிகுந்த போராட்டங்களுக்கு இடையே அப்பகுதியினர் எடுத்த முயற்சியின் காரணமாக மாநகராட்சியினர் 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டியை மட்டும் கொண்டு வைத்து விட்டு சென்றனராம். மேலும் அப்பகுதியினர் செலவு செய்து மேடை கட்டி அந்த தொட்டியை வைக்க உத்தரவிட்டனராம்.

அதன்அடிப்படையில் மேடை கட்டி அந்த தொட்டியை அப்பகுதியினர் வைத்தாலும் அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இலவச குடிநீரை லாரி மூலம் கொண்டு வந்து நிரப்புவது இல்லையாம். மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்த தண்ணீர் கொள்ளைக்காரன் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் அல்லக்கைகள் மூலம் அப்பகுதியினர் பணம் கொடுத்தால் மட்டுமே குடிநீரை நிரப்ப உத்தரவிட்டுள்ளானாம்.அது தவிர மற்ற இடங்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும் வசூல் வேட்டை நடத்தாமல் நிரப்புவது இல்லையாம் .

மேட்டுக்குடியினரின் அடுக்ககங்கள் தமக்குத் தேவையான முழு அளவுத் தண்ணீரையும் லஞ்சம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்குமதுரை மாநகராட்சி டேங்கர்கள் வரை, நிலத்தடி நீர் இறைப்பதற்காக பம்புகள் வரை அடிபணிந்து சேவை செய்ய அணிவகுத்து வருகின்றன.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் எவரிடம் வேண்டுமானாலும் போய் புகார் கொடு. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கொக்கரிப்புடன்
இலவச குடிநீரை பொதுமக்களுக்கு லாரி மூலம் வினியோகம் செய்ய மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்த கொள்ளைக்காரனின் அல்லகைகள் வெளிப்படையாக தாட்டியமாக சொல்கிறான் என்றால் பொதுமக்களிடம் நடத்தும் வசூல் வேட்டையில் அனைவருக்கும் பங்கு போக்காமலா இருக்கும் ?

18வயதிற்கு கீழ் உள்ள உள்ளவர்களை பணியில் அமர்த்த கூடாது என்பது அரசாங்கத்தின் சட்ட விதி. ஆனால் இலவச குடிநீரை பொதுமக்களுக்கு லாரி மூலம் வினியோகம் செய்ய மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்த கொள்ளைக்காரனின் அந்த சட்டத்தை மீறி பணியாளர்களை நியமனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது .

வீடுகளில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்கு நடுத்தர மக்களிடம் வரியை மட்டும் தவறாமல் வசூல் வேட்டை நடத்தும் மதுரை மாநகராட்சி மேற்படி பிரச்னைகளுக்கு என்ன தீர்வு அளிக்கப் போகிறதோ கடவுளுக்கே வெளிச்சம்.

நேர்மையற்ற முறையில் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளையும் அதற்கு கைக்கூலியாக செயல்படும் அதிகாரிகளையும் ஒழித்து கட்டினால் மட்டுமே வரும் காலங்களில் நடுத்தர மக்கள் மன நிம்மதியுடன் வாழும் நிலை உருவாகும் என்பதே நிதர்சனமான உண்மை.