
ஒரே விஷயம்தான்……. ஒருவருக்கு மிக விருப்பமுடையதாகவும்…
அவசியமானதாகவும்.. ஏற்றுக்கொள்ளகூடியதுமாகவும் இருக்கும்…..
மற்றவருக்கோ …. பிடிக்காததாகவும்..அவசியமற்றதாகவும்… ஏற்றுக்கொள்ள முடியாதபடியும் இருக்கும்…..
இதில் அந்த விஷயத்தை தவறு சொல்ல முடியாதே..யாரும்…
அல்லது..விருப்பமுடையவர்..விருப்பமில்லாதவரை வற்புறுத்தலும் ஏற்புடையது இல்லையே….
வற்புறுத்துதலும்…புரியவைக்கிறேன் பேர்வழி என்று அநாவசியமாக தொல்லைகள் செய்வதும்..
பிறரது நிம்மதியை கெடுப்பதும்..எந்த வகையில் நியாயம்…
அதனால் பலன்தான் என்ன… சொல்பவரது நிம்மதியும் சேர்ந்தேதான் தொலைந்துபோகும்…
சாதாரணமாக உணவு வகைகளை..உடைகளை எடுத்துகொண்டால்கூட…
ஒவ்வொருவரது விருப்பமும்..வெவ்வேறு…
அவரவர்களுக்கு பிடித்ததையே தேர்ந்தெடுப்பர்…..
நன்மை..தீமைகளை வேண்டியவருக்கு எடுத்துரைத்தலில்கூட ஒரு நாகரிகத்தை கடைபிடிக்கலாம்..
மென்மையாக… மனம் நோகாதவாறு… அழகாக..நேர்த்தியான வார்த்தைகளில் அளவாக வெளிபடுத்திவிட்டு அமைதிகாக்கலாம்…
அதற்குமேல் அவரது விருப்பமாக இருக்கலாமே…. தனக்கென்று ஒரு..யாருமே விரும்பகூடிய ஒன்று..தனது விருப்பம்..ஆசைகள்…எதிர்பார்ப்புகள்..எல்லாமே வித்தியாசபடுமே…..
எதற்காக..வற்புறுத்தலும்…அதனால் ஒருவருக்குமே ஏற்படும் மனகசப்புகளும்..மன உளைச்சல்களும்… புலம்பல்களும்…
எவ்வளவு வேண்டியவராக இருந்தாலும்…அன்பிற்குரியவராக இருந்தாலும்…. நமது கடமையை செய்வது..ஒரு எல்லையோடு நிறுத்திகொள்ளல் எல்லாவற்றிற்குமே நலம்….
அதே சமயம்… மற்றவரது சொற்களை ஏற்றுக்கொள்வதும்..மறுதலிப்பதும்..நாகரிகமாகவே இருக்கலாம்…
இதனால் நட்புகளை உறவுகளை இழப்பதும்… மன உளைச்சலும் தவிர்க்கபடும்…
பலருமே..பலராலுமே நேசிக்கபடுவோம்….. முயற்சிப்போம்…