Header Banner Advertisement

உடலை பாதிக்கும் 90 % நோய்கள் வர காரணம் என்ன ?


www.villangaseithi.com

print

கேட்கவே ஆச்சரியமா இருக்கும்..இருந்தாலும் இதான் உண்மை.. நமது உடலை பாதிக்கும் நோய்களில் 90 சதவிகிதம் மனோரீதியான குறைபாடுகளினாலேயே ஏற்படுகின்றது…

நம்பிதான் ஆகவேண்டியிருக்கின்றது… சாதாரண தலைவலி ஜலதோஷத்திலிருந்து..உயிரை குடிக்கும் இருதய நோய் கேன்சர் வரை மனநல பிரச்சனைகளின் விளைவே…

அப்படி பட்ட மனபாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணமாயிருப்பது டென்ஷன்தான்..எதற்கெடுத்தாலும் டென்ஷன்..என்ன நடந்தாலும் எதை பார்த்தாலும் டென்ஷன்…

வீட்டில் டென்ஷன்..குழந்தை அழுதால் டென்ஷன்..சாப்பாடு லேட்டானால் டென்ஷன்… வீடு அலங்கோலமாக கிடந்தால் டென்ஷன்..டையை காணவில்லை என்றால் டென்ஷன்.. அலுவலகம் வந்தால் எல்லாரிடமும் டென்ஷன்…

என்னத்ததான் சாதிச்சோம் இப்படி வாழ்ந்து..சிடுமூஞ்சி என்ற பெயரைதவிர…நோய்களை தவிர…

எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்தல்..ஆத்திரபடுதல்… யார் எதை செய்தாலும் கோபபட்டு ஐயோ என்று தலையிலடித்துகொண்டு அரற்றுதல்… சின்ன விஷயங்களுக்கு கூட அதாவது அற்ப விஷயங்களுக்கு கூட ஆத்திரபட்டு தாறமாறாக கத்துதல்..

சகிப்பு தன்மை சிறிதும் இன்றி தான் பிடித்த பிடியிலேயே நிற்றல் போன்றவை பின்னர் எங்கே கொண்டு நிறுத்தும்…அதை நான் சொல்ல வேண்டுமா…

நம்மிடமே உள்ள அருமையான மருந்து சிரிப்பு.. எது நடந்தால் என்ன..எது போனால் என்ன..வந்தால் என்ன…நாம் ஆத்திரபட்டு அரற்றுவதால் எதையும் மாற்றிவிடபோவதில்லை…மேலும் பிரச்சனைகள்தான்… எல்லாவற்றிற்கும் மேலாக நம் உயிரை குடிக்கும் வியாதிகளோடு அவதியுறவேண்டியதுதான்…

எது வரினும் இன்முகத்தோடு எதிர்கொள்ள கற்றுகொண்டுதான் ஆகவேண்டும்..அதனை சமாளிக்கும் திறனைதான் வளர்த்து கொள்ளவேண்டுமே தவிர டென்ஷனாவதால் பிரச்சனைகள்தான்….

யோசிக்க யோசிக்க… பழக பழக… எல்லாமே எளியதுதான்.. ஆரம்பத்தில் மாற்றிக்கொள்ள இயலாவிடினும்… போக போக.. நம்முடைய முயற்சி நமக்கு வெற்றியையே தரும்…

யோகாவோ..தியானமோ..எதுவாக இருந்தாலும் நம் மனம் நம் வசம்தான்..அதனை கட்டுக்குள் வைத்து நமக்கு பிடித்த மாதிரி செலுத்துவதுதான் எல்லாவற்றின் மூலமும்.. சோ… மனதை கட்டுக்குள் வைத்து முறையாக செயல்படுத்துவோம்….