
தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் (பெரியது) – 4
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, உதிர்த்தோ, சிறு துண்டுகளாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் அரிந்துகொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தொடர்ந்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். நிறம் மாறக் கூடாது.
வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
* ஒட்டாமல் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிலர் கடலைமாவு கரைத்து விடுவார்கள். சுவையைக் கெடுக்கும். கொஞ்சம் அதிலிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்து மசித்து விட்டுக் கொதிக்க விடலாம். சூடாக இருப்பதை விடவும், ஆறியதும் கூட்டு அதிகமாக இறுகும் என்பதை நினைவில் வைக்கவும்.