
print
உலகத்திலேயே மிகப் பெரிய இயந்திரம் எங்கிருக்கிறது? அதை பார்க்க முடியுமா? என்று கேட்டால் பார்க்க முடியாதுதான் என்பதுதான் உண்மை. இந்த இயந்திரம் ஃபிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப் பகுதியில் பூமிக்கடியில் 574 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்தில் இந்த இயந்திரம் இருக்கிறது. மனிதன் இதுவரை உருவாக்கிய கருவிகளில் இதுதான் பிரமாண்டமானது.
இந்தக் கருவி 1998 லிருந்து 2008 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். 100 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் இயற்பியல் வல்லுனர்கள் இதை ஆக்கியிருக்கிறார்கள். இதன் பெயர் ‘லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்’.
இந்த கருவி ஒரு துகள் முடக்கி சோதனைச்சாலையாக செயல்படுகிறது. இதன் மூலம் அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டன்களை கிட்டத்தட்ட ஒளியின் வேகமான நொடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒன்றுடன் ஒன்றாக மோதவிட்டு ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தனர். இதற்காக பூமியை விட ஒரு லட்சம் மடங்கு கூடுதலான காந்தப் புலம் உருவாக்கப்பட்டது. இந்த துகள்கள் மோதல் மூலம் ‘கடவுள் துகள்’ என்று கூறப்படும்‘ஹிக்ஸ் போஸான் துகள்’ கண்டு பிடக்கப்பட்டது.
இதன்மூலம் பிரபஞ்சம் மிகப் பெரிய வெடிப்பின் காரணமாக உருவானது என்பதை கண்டறியமுடிந்தது. இங்கு 3 ஆயிரம் பேர் இரவுப் பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.