Header Banner Advertisement

உலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்


www.villangaseithi.com

print
லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அதைவிட மிகப் பிரமாண்டமான பேருந்து நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக பலவித பிரமாண்டமான ஸ்டேடியங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவான ஒரு பிரமாண்டம்தான் இந்த பேருந்து நிலையம்.

கிழக்கு டெல்லியில் இந்திரப்பிரஸ்தா பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும். காமன்வெல்த் கிராமத்தில்தான் இந்த பேருந்து நிலையம் உள்ளது. இதில் உள்ள மூன்று பிரதான வாசல்கள் தனித்தனியாக கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு 61 ஏக்கர். இதில் சாதாரணமான பேருந்துகளைவிட கூடுதலான அகலமும் நீளமும் கொண்ட தாழ்தள பேருந்துகளை ஆயிரத்துக்கும் மேல் தாரளமாக நிறுத்தலாம். அதனால் இந்த பேருந்து நிலையத்திற்கு ‘மில்லினியம் பஸ் டெப்போ’ என்று பெயர் வைத்தார்கள். ஏதாவது பழுது என்றால் அதை சரிசெய்வதற்கு வசதியாக பேருந்து நிலையத்திற்குள்ளே 5 பணி மனைகள் இயங்கி வருகின்றன.

இது போக ஒரு சரக்கு மையம் வேறு இருக்கிறது. பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களில் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே அதிநவீன கண்காணிப்பு மையம் ஒன்றும் இயங்கி வருகிறது

டெல்லி வாகனங்கள் டீசலுக்கு விடை கொடுத்து பல ஆண்டுகள் ஆகின்றன. அங்கு இயக்கப்படும் வாகனங்களில் சி.என்.ஜி. என்ற கேஸ் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. இந்த கேஸிலும் மிகக் குறைந்த பட்சமாக கார்பன் வெளியிடக்கூடிய ‘சி.என்.ஜி. ஹை-பிரிட்‘பேருந்துகள் வந்துவிட்டன. குறைவான மாசுக்குறியீடும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேருந்து ஒன்றின் விலை ரூ.1.5 கோடியாகும். இத்தகைய சிறப்பான பேருந்துகளை உலகிலேயே முதன்முதலாக இயக்கிய பெருமையும் டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கே உரியது.

காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த பேருந்துகளை மாநகரில் வலம் வர வைத்திருக்கிறது, டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகம். நமது ஊரில் ஓடும் தாழ்தள சொகுசு பேருந்துகள் மத்திய அரசின் திட்டம் மூலம் வழங்கப்பட்டவை. இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அதிநவீன சொகுசு மற்றும் சுற்றுச்சூழலை கெடுக்காத பேருந்துகள் காமன்வெல்த் போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப் பட்டன.
இந்த பேருந்துகளும் அவை நிறுத்தி வைக்கப்படும் பிரமாண்டமான பேருந்து நிலையமும் காமன்வெல்த்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இவற்றையெல்லாம் மூடிமறைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது காமன்வெல்த் முறைகேடு என்பது சற்று வருத்தத்திற்கு உரியதுதான்.
யமுனை நதிக்கரையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசுப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.