Header Banner Advertisement

எண்ணி எண்ணி ஏங்கி கொண்டே இருக்கலாமா ?


dsfd

print

யாருக்குமே என்றுமே எதாவது தேவைகள் ஆசைகள் அதற்கான யோசனைகள் முயற்சிகள் என்று இருந்துகொண்டேதான் இருக்கும்….. தேவைகளே இல்லாதவர்… எதற்கும் ஆசையே படாதவர் என்று எவரையும் சொல்லிவிடமுடியாது…

அது பெரியதோ..சிறியதோ… அவரவர் நிலைக்கேற்ப எதாவது விருப்பங்கள் ஏக்கங்கள் இருக்கும்…
வாழ்க்கையில் முற்றிலும் திருப்தியடைந்துவிட்டவர் என்று எவரையும் கைகாட்டிவிட முடியாது… சைக்கிள் வாங்கிவிட்டால்… பைக் வேண்டும்…

பைக் இருந்தால் கார் வேண்டும்… வீடு வசதி வாய்ப்புகள் என்று… ஒரு தேவை நிறைவடைந்ததும் மனம் ஆட்டோமேட்டிக்காக அடுத்ததை பற்றி யோசிக்க தொடங்கிவிடும்… அதுதான் மனித மனம்

எல்லாமே இருந்தாலும் லேட்டஸ்டாக மாற்றிவிடவேண்டும் என்று எதையாவது யோசித்துகொண்டும் விருப்பபட்டுக்கொண்டும்தான் இருக்கின்றது…

ஆசைபடலாம்..வாழ்க்கையில் ஒரு எய்ம் இருக்கலாம் தவறில்லை

பட் எப்பொழுதும் அதையே எண்ணி ஏங்கி இருக்கும் சந்தோஷங்களை அனுபவிக்காமல் எப்பொழுதும் ஏக்கத்துடனேயே வாழ்க்கையை கழிப்பது முற்றிலும் மன அழுத்தத்தையும் உளைச்சலையும் கொடுத்து நம்மை மூழ்கடிக்ககூடியது…

அடுத்தவர்களையும் அவர்களது வசதிகளையும் எண்ணியே ஏங்குவது… நமது முன்னேற்றத்தை தடுத்து வேலையில் கவனமின்மை… குடும்பத்தை உறவுகளை கவனிப்பதில் குறைபாடு… உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதையும் தொலைக்கும் நிலையில் தள்ளிவிடும்…

தேவைகள் என்று பார்த்தாலே அதன் அடிப்படை பணம்தான்… எங்கு பார்த்தாலும் பணபிரச்சனைதான் பிரதானமானது… அது இருந்தால் போதும் எல்லாவற்றையும் அடைந்ததுபோல்தான் அதற்கும் ஒரு லிமிட் இல்லை..எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப தேவைகளையும் மிக வேகமாக பெருக்கிகொண்டேதான் இருப்போம்

ஒன்றைமட்டும தெரிந்தாலும்
மறந்தேவிடுவோம்.. என்னவோ அந்த பிரச்சனை தனக்கு மட்டுமேதான் என்பதுபோல் இருக்கின்றனர்…அது எல்லோருக்குமே பொதுவானது.. அவரவர் நிலைக்கேற்ப…

நம்முடைய மன அழுத்தங்களுக்கும்..மன உளைச்சல்களுக்கும்
எப்படி பார்த்தாலும் முக்கிய காரணம் பண பிரச்சனையாகதான் இருக்கும்…

எல்லாவகையான குற்றங்களும் அதனை அடிப்படையாக வைத்துதானே நடக்கின்றது…அது சிறியதோ..பெரியதோ..
திட்டம்போட்டு செலவு செய்யும் பழக்கமும்…. இருக்கும் வசதிகளை மிக அனுபவித்து மகிழ்ந்து… நிறைவாக வாழ்வதும் நம் கையில்தான் இருக்கின்றது… அதற்காக ஒரு இன்ஸ்டியூட்டில் போய் படித்துவிட்டு வந்துதான் நடைமுறைபடுத்தவேண்டும் என்றில்லை..அப்படியும் படிப்போடு சரி… செய்யமாட்டோம்…

மனம் இருந்தால்… சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே இயலும்… நமக்காக அடுத்தவர் செய்யமுடியாத காரியமாயிற்றே..நாமேதான் முயன்று பார்க்கவேண்டும்.. அதிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கின்றது…

ஆசையும் இருக்கட்டும் அதற்கான முயற்சிகளும் இருக்கலாம்… அதே சமயம் அதற்காக உளைச்சல் அடைய தேவையில்லை..முயற்சி பலித்தால் நலமே..அதனையும் அனுபவிக்கலாம்… இல்லையென்றால் அதற்காக இருப்பதையும் அனுபவிக்காமல் இருக்கவேண்டுமென்பதல்ல
எப்படி இருக்கின்றீர்கள் என்பவரிடம் நிறைவாக உற்சாகமாக இருக்கின்றேன் என்பதற்கும்… எதோ இருக்கின்றேன் என்று அசட்டையாக இருப்பதற்கும் பலன்கள் இருவருக்குமே உண்டு

நமது உற்சாகம் மற்றவர்களையும் எளிதில் தொற்றிகொள்ளும் அவர் என்ன மனநிலையில் இருந்தால் சட்டென்று மாறும்..நமது மந்தமும் அதேபோல்தான் அடுத்தவரையும் நம்மை சேர்ந்தவர்களையும் மாற்றவல்லது…

பரவாயில்லையே ப்ரமோஷனா..இன்கிரிமென்டா புது வீடா..காரா.. பிள்ளைகள் படிப்பில் நல்ல நிலையா என்பவரிடம் உற்சாகமாக அந்த பாராட்டுதல்களை ஏற்றுக்கொள்வதற்கும்..

ஆமா போங்க..இதவிட வேறு யாரையோ பெட்டர் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். நம் மகிழ்ச்சியை முன்னேற்றத்தை மாற்றிபோடவல்ல காரணிகள் அவை… அதொன்றும் தன்னடக்கத்தில் சேராது… முழு மனதோடு வரும் பாராட்டுகளை மனம் குளிர ஏற்றுக்கொள்ளலாமே… என்ன தவறு..

இருப்பதில் போதும்..இது இப்போது எனக்கு நிறைவானது என்று மனம் குளிர்ந்து பாருங்களேன்…

இதெல்லாம் யாருக்கிங்கே தெரியாமல் இருக்கின்றது.. தெரிந்தும் நடைமுறைபடுத்த விரும்பாமல்.. யாருக்கோ..எதற்கோ என்று நம்மைநாமே தாழ்த்தி குறைத்து மதிப்பிட்டு..அப்படியே வாழ்ந்தும் முடித்துவிடுகின்றோம்..

கொஞ்சம் மாற்றித்தான் வாழ்ந்து பார்ப்போமே…