Header Banner Advertisement

எந்த நாட்டினர் அதிகம் உழைக்கிறார்கள்?


worker-germany

print
லகம் முழுவதுமே ஒரு நம்பிக்கை இருக்கிறது கடினமான உழைப்பாளிகள் என்றால் அது ஜப்பானியர்கள்தான் என்று. அந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் இடி விழச் செய்திருக்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று. அதெல்லாம் பழைய கதை என்று அது  மேலும் கூறுகிறது.
டென்மார்க் சுகவாசிகள்
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி பல மேலை நாடுகளின் வாழ்க்கை முறையையே புரட்டிப்போட்டு விட்டது. வேலைவாய்ப்பை வெகுவாக குறைத்துள்ளது. அதனால் இருக்கிற வேலையை அதே சம்பளத்தில் அதிக நேரம் பார்க்க வேண்டிய இக்கட்டான நிலை பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்க வில்லை.

வளர்ந்த 30 நாடுகளில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வு இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் நடத்தப்படவில்லை. அந்த ஆய்வின்படி கடின உழைப்பாளிகள் என்றால் அது மெக்ஸிக்கோ நாட்டு மக்கள்தான். அலுவலகம், தொழிற்சாலை, வீட்டுவேலை என்று எதுவாக இருந்தாலும் ஒரு நாளில் 10 மணி நேரம் அசராமல் உழைப்பவர்கள் மெக்ஸிக்கோ வாசிகள்தான்.

மெக்ஸிக்கோ தொழிலாளர்கள்
இவர்களுக்கு நேர்மாறாக சுகவாசிகளாக வேலைசெய்யாமல் பொழுதை கழிப்பவர்கள்டென்மார்க் நாட்டினர். அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 3.45 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். இதற்கு டென்மார்க்கின் சீதோஷ்ண நிலையும், பூகோள அமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். டென்மார்க்கில் அதிக விடுமுறை நாட்கள் நடைமுறையில் இருப்பதும் வேலை நேரக் குறைவுக்கு காரணமாக உள்ளது.

மேலும், தென்கொரிய மக்கள் வருடத்திற்கு 2,913 மணி நேரமும், சிலி நாட்டு மக்கள் 2,068 மணி நேரமும், கிரேக்கர்கள் 2,017 மணி நேரமும் வேலைப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ்காரர்கள் 1,647 மணி நேரமும், ஜெர்மானியர்கள் 1,408 மணி நேரமும் வேலை செய்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

ஜெர்மன் தொழிலாளர்
மேலும், உலக தொழிலாளர் கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், கடினமான உழைப்பாளிகள் அதிகம் இருப்பது ஆசியாவில்தான் என்கிறது. இவர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலைப்பார்க்கிறார்கள். அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் இந்தியா, சீனா, இலங்கை, வங்கதேசம், மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்திருக்கின்றன. இவர்கள் நீண்ட நேரம் உழைத்தாலும் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
சீனத் தொழிலாளர்கள்
மேலை நாட்டினர் குறைவான நேரம் உழைத்தாலும் அதன் உற்பத்தி திறன் அதிகமாக இருக்கிறது. மற்றொரு ஆய்வின்படி சீனர்கள் 8.4 மணி நேரமும், அமெரிக்கர்கள் 8.3 மணிநேரமும், இந்தியர்கள் 8.1 மணி நேரமும், பிரிட்டிஷ்காரர்கள் 7.8 மணி நேரமும், பிரான்ஸ் நாட்டினர் 7.5 மணி நேரமும், ஜெர்மானியர்கள் 7.4 மணி நேரமும், ஜாப்பானியர்கள் 6.3 மணி நேரமும் தினசரி வேலை செய்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பாளிகள் என்ற காலம் மலையேறிவிட்டது.
இந்தியத் தொழிலாளர்