Header Banner Advertisement

என்றுமே மனதில் எதாவது சுமையோடு இருப்பவரா நீங்கள் ?


www.villangaseithi.com

print

எப்போதுமே… என்றுமே மனதில் எதாவது சுமையோடு… பாரத்தை சுமந்துகொண்டே இருக்கின்றார்கள் பொரும்பாலானவர்கள்…

பல காரணங்கள்…ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்…. ஆனால் சுமந்துகொண்டேதான் காலம் தள்ளுகின்றார்கள்….

மனமிருந்தால்தான் மார்க்கமுண்டு..யாருமே அறிந்ததுதான்… பாரத்தை இறக்கிவைத்துவிட்டால்..வாழ்வு மிக இனிமையாகும்.. கஷ்டபட்டு வாழ்வை கடமைக்கு தள்ள தேவையில்லைதான்….

அறிந்தும்…தெரிந்தும் அசட்டையாகதான் இருக்கின்றோம்.. அது ஏதோ யாருக்கோ எதற்கோ சொல்லபட்டதுபோல்…

மன குழப்பமோ…கவலையோ..எதோ இனம்புரியாத மனஉளைச்சலோ … எப்போது..உற்சாகம் குன்றி வேலையில் கவனமில்லாமல்..ஊண் உரக்கம் குறைந்து எதையோ இழந்ததுபோல் தோன்ற ஆரம்பிக்கின்றதோ…

அதை மிக விரும்பி…ஒரு ஃபேஷன்போல் எப்போதும் முகத்தை தொங்கபோட்டுகொண்டு..ஒரு விரக்தி சிரிப்பு சிரித்துகொண்டு.. யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல்..விட்டத்தை வெறித்துகொண்டு… எந்த பேச்சிலும் செயலிலும் இன்ட்ரஷ்ட் இல்லாமல்… ஒதுங்கியே இருந்துகொண்டு உங்களை நீங்களே வருத்திகொள்ளாமல்

அப்போதே… உங்களது அப்நார்மல் ஆக்டிவிட்டீஸை உணர்ந்த கனத்திலிருந்து… சற்று நேரம் ஒதுக்கி உங்களை நீங்களே உற்று நோக்குங்கள்… உள் மனதை ஆராயுங்கள்…. எங்கே..எதிலே சந்தோஷம்…எதை செய்யவேண்டும்..உடனடியாக…எது திருப்தி அளிக்கிறது என்று கவனியுங்கள்…

சற்று அவசிய வேலைகள் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை… இதை களைவதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக தலையாய கடமையாக கொண்டு உங்களை நீங்களே அனலைஸ் பன்னுங்கள்..மாற்றத்தை கொண்டு வரலாம்…

சுறுக்கமாக உங்களுக்கு நீங்களே ஆலோசகராக.. மருத்துவராக.. உற்ற தோழமையாக எதுவாக வேண்டுமானாலும் மாறிகொள்ளுங்கள்… அது உங்களை மாற்றகூடியதாக… விரும்பதக்க வகையில் செலுத்தகூடியதாக இருக்கவேண்டும்…

ரெய்க்கியின் வழிமுறைகளைகூட சற்று மாற்றி செயல்படுத்தி பார்க்கலாம்…குறிப்பாக

இன்று ஒருநாள் மட்டும் சோகமாக எதையோ இழந்ததுபோல் இருக்கவே மாட்டேன்

இன்று ஒருநாள் மட்டும் விரக்தியாக கவலையாக இருக்கவேமாட்டேன்..

இன்று ஒருநாள் மட்டும் எல்லோருடனும் ஓடிஓடி தோழமையுடனும் பிரியத்துடனும் பழகுவேன்

இன்று ஒருநாள் மட்டும் எல்லோரையும் நேசிப்பேன்..சுற்றங்களை நேசிப்பேன்…

இன்று ஒருநாள்மட்டும் எல்லா வேலைகளையும் சோம்பலின்றி ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன்

இன்று ஒருநாள் மட்டும் யாரையுமே வெறுக்கமாட்டேன்.. யாருக்கும் தீங்கு செய்யமாட்டேன்

இன்று ஒருநாள் மட்டும் என்னை நானே மிக நேசிப்பேன்
என்று ஒருநாள் மட்டும் என்னை நானே அட்டகாசமாக தோள்தட்டி பாராட்டிக்கொள்வேன்

இன்று ஒரு நாள் மட்டும் எனக்கு நானே பரிசளித்து கொள்வேன்.. என்னை நானே மிக ரசிப்பேன் என் செயல்களை நேசிப்பேன்

இன்று ஒருநாள் மட்டும் மூட நம்பிக்கையின்றி இயற்கையை நம்புவேன் நேசிப்பேன்..

இன்று ஒருநாள் மட்டும் என்னை நானே நோய்களின்றி ஆரோக்கியமாக உணர்வேன்

இன்று ஒருநாள் மட்டும் மிக்க மகிழ்ச்சியாக..மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்க்கையை அனுபவிப்பேன்..

இன்று ஒருநாள் மட்டும் மாபெரும் வெற்றியாளராக வெற்றியடைவேன்….

இவைகள் எனது வழிமுறைகள்தான்… பின்பற்றிதான் பாருங்களேன்… ஒரு நாள் என்பது..ஒவ்வொரு நாளுமாகட்டுமே..