
மன உறுதியுடனும்.. திறமையாகவும் செயல்படுவதற்கு படித்தவர்கள்..படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை.. அதற்கு ஆண் பெண் என்ற வித்தியாசமும் இல்லை..
படித்தவர்…படிக்காதவர் … இரு தரப்பிலுமே இரண்டுமே உண்டு அதற்கு காரணம் குடும்ப சூழல் வளர்ப்பு முறை… பரம்பரை வாகும் காரணமாக இருக்கலாம்…
கல்வி அறிவு ஒருவரது திறமையை பட்டை தீட்டவும்… மேலும் சிறப்பாக திறமையாக செயல்படவும் வழி வகுக்கலாம்..சிலர் படிப்பறிவை விரயமாகவும் செய்துவிடுவதும் உண்டு…
பெற்றோர்களிடம் நற்பண்புகள் இருந்தால் நிச்சயம் பிள்ளைகளுக்கும் சொல்லிதான் வழிநடத்துவார்கள்… நேற்றைய பிள்ளைகள் இன்றைய பெற்றோர்கள்..இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள்…
இதற்காக யாரும் வருந்தவேண்டாம்… எல்லா பெற்றோர்களுமே நற்பண்பு நிறைந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது… தன்பிள்ளையை திருட்டு வேலைக்கும் வழிபறிக்கும்.. தீய செயல்கள் செய்வதற்கும் துண்டும் பெற்றோரும் உண்டு..
அறிந்தே தன் பிள்ளை செய்த தவற்றை இல்லை என்று வாதிடும் பெற்றோரும் உண்டு
தான் விரும்பதகாத வகையில் நடந்துகொண்டு பிள்ளைகளை ஒழுக்கமாக இரு என்று பல கதைகளை சொல்லி அறிவுறுத்துவதினால் எந்த பயனுமே இல்லை…
பிள்ளை அச்சமோ..வேறு காரணங்களாலோ..வெளியில் சொல்லாவிட்டாலும்..மனதிற்குள் நினைப்பான்… இவர்கள் ஏன் இதனை பின்பற்றுவதில்லை..நம்மை மட்டும் சொல்கின்றார்கள் என்று..
சில பெற்றோர்கள் உதாரணமாக வாழ்ந்து காட்டுவதும் உண்டு..அதனையும் அப்படியே பிள்ளைகள் பின்பற்றிவிடுவதில்லை…அங்கேயும் தறுதலையாக இருப்பான்
மிக அறிவாளியாக.. படிப்பாளனாக… பண்பாளனாக… இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுமே 100 சதவிகிதம் அப்படியே இருப்பதில்லை…. பிள்ளை மக்காக இருப்பான்
படிப்பறிவில்லாத..பண்பில்லாத…அறிவில்லாத..மோசமான பெற்றவர்களின் பிள்ளைகளும் 100 சதவிகிதம் அப்படியே இருந்துவிடுவதில்லை… பிள்ளை அறிஞனாகவும் இருப்பான்
இதிலிந்தே அறிந்துகொள்ளமுடிகிறதே…எங்கும் எல்லாமும் கலந்தே இருக்கின்றது… அவரவர் சொந்த அறிவு.. விருப்பங்களும்..ஆர்வங்களும்..தனிபட்ட திறமைகளுமே இந்த விதத்தில் மேலோங்கியிருக்கின்றது என்று…
சோ…படிப்பறிவோ… வளர்ப்பு விதமோ….கடமைகளை செவ்வனே செய்துவிடலாம்… நல்வழி படுத்திகொண்டேயிருக்கலாம்… அவரவர் விருப்பங்கள் .. சுயசிந்தனைகள்.. ஆர்வங்களை… சுற்று சூழலை பொருத்தே திறமையோ..பண்போ… மன உறுதியோ 100 சதவிகிதமாகின்றது…
பெற்றவர்களும்..நல்வழிபடுத்துபவர்களும் தத்தம் கடமைகளை செவ்வனே செய்யலாம் பலன் எவ்விதமாயினும் அது மற்ற காரணிகளை பொருத்தும் ஆகின்றது என்பதை உணர்ந்து அமைதிகொள்ளலாம்… தன்மீது குறைபட்டுக்கொள்ள அவசியமில்லை…
இதை உணரும் ஒவ்வொருவருமே… தன்னை சார்ந்த எந்த காரணியையும் குறைபட்டுகொள்வது அவசியமற்றது..மனம் இருந்தால் மார்க்கமுண்டு… சுய சிந்தனை..கட்டுப்பாடு தாமே அமைத்துகொள்வதுதான்..இப்படித்தான் வாழவேண்டும் என்று எண்ணினால் வாழலாம்…எப்படியும் போகலாம் என்றால் போகலாம்..
ஒவ்வொருவருமே யோசித்து பார்க்கலாம்…தான் இதுவரை நல்லவிஷயங்களை கேட்கவில்லையா..பார்க்கவில்லையா… படிக்கவில்லையா.. அதனை அப்படியே கேட்டு நடந்துவிட்டோமா..எத்தனையோ அற்புதமான விஷயங்களை தவறவிட்டவர்கள்தானே நாம்..
பட் வீடு வாங்கவேண்டும் என்று எண்ணினால் முடிவெடுத்துவிட்டால் குட்டிகரணம் போட்டாவது சாதிக்கின்றோம்.. பிடித்த விஷயங்களை செய்ய விரும்பிவிட்டாள் எப்படியாவது நடத்திவிடுகின்றோம்..
அப்படித்தான் நற்பண்புளையும் திறமையையும் உறுதியையும் ஆளுமையையும் விரும்ப பழகவேண்டும்…பழக்கவேண்டும்
சோ..யாருமே..பெண்களோ..ஆண்களோ… இதுவரை கேட்ட அணைத்தையும் விடுவோம்..இனியாவது இப்படித்தான் இருக்கவேண்டும்..வாழவேண்டும்..என்று முடிவெடுத்து உறுதிகொண்டு பாருங்கள்…. பின்பு சொல்வீர்கள்…